SK Dance With Son: குட்டி எல்லாம் இல்ல இது முரட்டு டேன்ஸ்.. மகனோடு மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் பராசக்தி. இந்த படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படம் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. சிவகார்த்திகேயன் பிப்ரவரி 17ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தனது இளைய மகன் குகன் உடன் நடனமாடி உள்ளார் சிவகார்த்திகேயன். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சிவகார்த்திகேயன் தனது 41 வது பிறந்த நாளை முன்னிட்டு தனது மனைவி ஆர்த்தி உடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கவனம் பெற்றது. அதேபோல் மாலை நேரத்தில் தனக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் இணைந்தும், பிறந்த நாள் கொண்டாடினார்.

பிறந்த நாள் கொண்டாட்டம்: இது தொடர்பான வீடியோக்களும் சில புகைப்படங்களுமே இணையத்தில் வேகமாக பரவியது. இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இவர்கள் பாடல்கள் ஒலிக்கப்பட, பலரும் நடனம் ஆடினர். இப்படி இருக்கையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படமான மதராஸி படத்தின் ஓப்பனிங் பாடலான சலம்பல பாடல் ஒலிக்கப்பட்டது.

Sivakarthikeyan celebrated his birthday with a joyful dance alongside son Gugan The heartwarming video is now going viral on social media

மகனுடன் ஆட்டம்: அந்த பாடலுக்கு சிவகார்த்திகேயனின் மகன் குகன் மற்றும் அங்கு வந்திருந்த மற்றொரு குழந்தை என இவரும் நடனம் ஆடினார்கள். இதைப் பார்த்த பலரும் கைதட்டி ஆரவாரப்படுத்த, சிவகார்த்திகேயனோ மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார். இதனால் அவரும் தனது மகன் மற்றும் மற்றொரு குழந்தை உடன் இணைந்து நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் மகள் பாட்டுப் பாடி தமிழ்நாடு அரசு விருது வாங்கிவிட்டார், மகன் போடும் ஆட்டத்தைப் பார்த்தால் மகனும் சீக்கிரமே சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் போலயே என்று பதிவிட்டு வருகிறார்கள். இது தொடர்பான பதிவுகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சேயோன்: சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள படம் சேயோன். இந்த படத்தை செல்வகுமார் முருகேசன் இயக்குகிறார். கமல்ஹாசனின் இந்த படத்தை தயாரிக்கிறார், சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் போஸ்டர், கிலிம்ஸ் வீடியோ உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X