தனுஷ் மீது சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் அன்பு குறையல.. செம அன்யோன்யம் ப்பா

சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது சினிமாவில் இருக்கும் உயர்ந்த இடத்துக்கு காரணமானவர்களில் தனுஷும் ஒருவர். அவரது முன்னாள் மனைவி இயக்கிய 3 படத்தில் முக்கியமான ரோலை கொடுத்தார். அதேபோல் தான் தயாரித்த எதிர்நீச்சல் படத்திலும் ஹீரோவாக நடிக்க வைத்தார். ஆனால் சமீபமாக இரண்டு பேருக்கும் இடையே மனஸ்தாபம் என்றெல்லாம் தகவல்கள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டில் அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். அவர் நடித்த பராசக்தி, அமரன், டான், டாக்டர் ஆகிய படங்கள் நூறு கோடி ரூபாய் வசூலை அள்ளின. இதன் காரணமாக அவரது மார்க்கெட்டும், சம்பளமும் சரசரவென்று உயர்ந்தது. விஜய்யும் சினிமாவை விட்டு விலகவிருப்பதால் அவரது இடத்தை சிவாதான் பிடிப்பார் என்பது எஸ்கே ரசிகர்களின் பலமான நம்பிக்கையாக இருக்கிறது.

வளர்ச்சிக்கு காரணமானவர்கள்: சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு பாண்டிராஜ், தனுஷ் உள்ளிட்டோர் காரணமாக இருந்தார்கள். அதிலும் தனுஷ் சிவகார்த்திகேயனை தனது உடன்பிறந்த சகோதரராகவே பார்த்தார். அவர்களுக்குள் அப்படி ஒரு நெருக்கம் இருந்தது. ஆனால் இரண்டு பேருக்கும் இடையே சில வருடங்களாக உரசல் வந்துவிட்டது என்று தொடர்ந்து தகவல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. அதுகுறித்து இரண்டு பேருமே எதுவும் சொல்லாமல் கடந்து செல்கிறார்கள்.

Sivakarthikeyan amp amp Dhanush Patch Up Viral Hug at TN Awards Ends Rift Rumours
Photo Credit:

தனுஷ் மீது அட்டாக்: அதேசமயம் கொட்டுக்காளி படத்தின் விழாவில் சிவகார்த்திகேயன் பேசியபோது, 'நான் யாரையும் என்னால்தான் வளர்ந்தார்கள் என சொல்லமாட்டேன்' என கூறியிருந்தார். அதை பார்த்த ரசிகர்களோ அந்தப் பேச்சில் தனுஷைத்தான் அவர் மறைமுகமாக தாக்கினார். சிவா நன்றி மறந்துவிட்டார் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை தனுஷ் மீது எஸ்கேவுக்கு எப்போதும் தனி மதிப்பு உண்டு சிவாவின் ரசிகர்கள் அடித்து சொன்னார்கள்.

ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில்: அப்படிப்பட்ட நிலைமையில்தான் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரனின் திருமணம் நடந்தது. அதில் தனுஷும், சிவகார்த்திகேயனும் கலந்துகொண்டார்கள். அப்போது அவர்கள் சேர்ந்து நடனமும் ஆட செய்தார்கள். அதை பார்த்த பிறகு, இரண்டு பேருக்கும் நட்பு இருக்கத்தான் செய்கிறது. வேண்டுமென்றேதான் ஒருதரப்பினர் அவர்களுக்குள் பிரச்னை என கிளப்பிவிடுகிரார்கள் என்ற கருத்து நிலவியது.

மீண்டும் நடந்த விஷயம்: இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு விருது வழங்கும் விழா நடந்தது. அதில் சிவகார்த்திகேயனும், தனுஷும் விருது பெற்றார்கள். அப்போது தனுஷ் விருது பெறுகையில் சிவா மகிழ்ச்சியோடு கைகள் தட்டினார். மேலும் தனுஷ் வந்தபோது மரியாதையோடு எழுந்து நின்ற அவர்; அன்போடு கட்டியும் அணைத்துக்கொண்டார். இதை பார்த்த பலரும் அவர்களுக்குள் பிரச்னையெல்லாம் இல்லை என்பதற்கு இதுவே சாட்சி என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

இரண்டு பேரின் மார்க்கெட் நிலைமை: இதற்கிடையே இரண்டு பேரின் கரியரை பொறுத்தவரை கடந்த வருடத்தில் தனுஷ் நடித்த மூன்று படங்களும் சரியாக போகவில்லை. இட்லி கடை மட்டுமே ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அதேபோல் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம் இந்த வருடம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. அதேசமயம் சம்பள விஷயத்தை பொறுத்தவரை தனுஷுக்கு ஈடாக சிவா பெற்றுவருகிறார் எனவும்; இன்னும் சில படங்களில் தனுஷைவிடவும் அதிகம் வாங்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கோலிவுட் பட்சிகள் கூறுகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X