பிந்து மாதவியுடன் காதல்... மனைவியை விவாகரத்து செய்ய சிவகார்த்திகேயன் ஆலோசனை?
நடிகை பிந்து மாதவியுடன் நெருக்கமாகிவிட்டதால், நடிகர் சிவகார்த்திகேயன் தன் மனைவியை விவாகரத்து செய்ய ஆலோசித்து வருவதாக பரபர தகவல் பரவிவருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களில் நடித்ததால் விறுவிறுவென புதிய படங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. மனைவி பெயர் ஆர்த்தி.
கேடி பில்லா கில்லாடி ரங்காவுக்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கும் பிந்து மாதவிக்கும் நெருக்கம் அதிகமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் சிவகார்த்திகேயனுக்கும் மனைவிக்கும் தினசரி கடும் வாக்குவாதமும் சண்டையும் நடந்து வந்ததாம். வளசரவாக்கத்தில் சிவகார்த்திகேயன் வீடு உள்ளது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் புகார் செய்யும் அளவுக்கு இவர்கள் வீட்டில் சத்தம் அதிகம் வந்து கொண்டிருந்ததால், சிலர் வீட்டுக்கு வந்து சமரசம் செய்ய முயன்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மனைவியை விவாகரத்து செய்ய வழி இருக்கிறதா என தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசித்து வருகிறாராம் சிவகார்த்திகேயன்.


Click it and Unblock the Notifications











