கொரோனா தடுப்பு நடவடிக்கை... முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் உதவி!

By

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நிதி அளித்துள்ளார்.

Recommended Video

ஆயிரம் ருபாய் 10 கிலோ அரிசி TV SERIAL கலைஞர்களுக்கு கொடுத்தார் சிவகார்த்திகேயன் |V-CONNECT|FILMIBEAT

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

ஈரான், இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வாழ்வாதாரம்

வாழ்வாதாரம்

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வேண்டுகோள்

வேண்டுகோள்

இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும், சிகிச்சைகளுக்காகவும், முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பொதுமக்கள், நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டு இருந்தது.

நிவாரண நிதி

நிவாரண நிதி

அதில், கொரோனா வைரஸ் தொற்றைச் சமாளிப்பதற்கான பணிகளைக் கருத்தில் கொண்டும், ஏழை, எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள இன்னலில் இருந்து அவர்களை விடுவிக்கவும், நோய்த் தடுப்புக்காகவும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்காக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு மனம் உவந்து தங்கள் பங்களிப்பை அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது' என்று கூறி இருந்தது.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

அத்தகைய நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80(ஜி)-ன் கீழ் 100 சதவிகித வரிவிலக்கு உண்டு என்றும் தெரிவித்திருந்தது. இதையடுத்து சில நிறுவனங்கள் நிதி உதவியை செய்து வருகின்றன. இந்நிலையில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன், 25 லட்சம் ரூபாயை, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X