Sivakarthikeyan : அன்பின் வழியது உயிர்நிலை.. சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் போஸ்ட்டைப் பார்த்தீங்களா?
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர். சிவகார்த்திகேயன் பிப்ரவரி 17ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், " எனது பிறந்தநாளுக்கு பேரன்பை வாழ்த்துகளாக தெரிவித்த உலகநாயகன் கமல்ஹாசன் சார் அவர்களுக்கும், பெருமதிப்பிற்குரிய ஐயா தொல்.திருமாவளவன் அவர்களுக்கும், அன்பிற்கினிய அண்ணன் சீமான் அவர்களுக்கும், அன்பு சகோதரர் அண்ணாமலை அவர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைத்துறை,பத்திரிகை, தொலைக்காட்சி, பண்பலை,இணைய ஊடகங்களில் இருந்து வாழ்த்திய எனது அன்பான நண்பர்களுக்கும், அனைத்து நடிகர்களின் ரசிகர்களுக்கும் மற்றும் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மீண்டும் ஒரு முறை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் உடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி. கமல்ஹாசன் சார் அவர்களின் தயாரிப்பில், மண் சார்ந்த கதைகளை சொல்லும் சிறந்த கலைஞன் சிவக்குமார் முருகேசன் அவர்களின் இயக்கத்தில், எனது கல்லூரி மூத்தவரும், 24 ஆண்டுகால நண்பருமான சந்தோஷ் நாராயணன் அவர்களின் இசையில் எனது அடுத்த படமான "சேயோன்" திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்ட படக்குழுவினருக்கும். அதற்கு பேராதரவு அளித்து என்னை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

அன்பின் வழியது உயர்நிலை: எனது அன்பு ரசிகர்களான சகோதர, சகோதரிகள், சமூக ஊடகங்களில் அன்பையும், வாழ்த்துக்களையும் தெரிவித்ததோடு,மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல நலத்திட்ட உதவிகள் செய்த உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். "அன்பின் வழியது உயிர்நிலை" என்றும் அன்புடன் சிவகார்த்திகேயன் " என்று குறிப்பிட்டுள்ளார்.
மனைவியுடன் தரிசனம்: சிவகார்த்திகேயன் தனது 41 வது பிறந்த நாளை முன்னிட்டு தனது மனைவி ஆர்த்தி உடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கவனம் பெற்றது. அதேபோல் மாலை நேரத்தில் தனக்கு நெருக்கமான நண்பர்களுடன் இணைந்தும், பிறந்த நாள் கொண்டாடினார். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மதராஸி படத்தின் ஓப்பனிங் பாடலான சலம்பல பாடல் ஒலிக்கப்பட்டது.
மகனுடன் ஆட்டம்: அந்த பாடலுக்கு சிவகார்த்திகேயனின் மகன் குகன் மற்றும் அங்கு வந்திருந்த மற்றொரு குழந்தை என இவரும் நடனம் ஆடினார்கள். இதைப் பார்த்த பலரும் கைதட்டி ஆரவாரப்படுத்த, சிவகார்த்திகேயனோ மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார். இதனால் அவரும் தனது மகன் மற்றும் மற்றொரு குழந்தை உடன் இணைந்து நடனமாடினார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











