விஜய்யின் இடத்தை பிடித்துவிட்டாரா சிவகார்த்திகேயன்.. தளபதி என போஸ்டர் அடித்த ரசிகர்கள்
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் உலகளவில் 350 கோடி ரூபாய்வரை வசூலித்தது. அந்தப் படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு 50 கோடி ரூபாய்வரை தனது சம்பளத்தை அவர் உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது. அடுத்ததாக அவர் பராசக்தி படத்தில் கமிட்டாகியிருக்கிறார். சமீபத்தில்தான் அந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இந்நிலையில் சிவாவின் ரசிகர்கள் ஒரு செயலை செய்திருக்கிறார்கள்.
கோலிவுட்டின் டாப் 5 ஹீரோக்கள் வரிசைக்குள் வந்துவிட்டார் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம்தான் அந்த இடத்தை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. மிகப்பெரிய ஹிட்டடித்த அந்தப் படம் உலகளவில் 350 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் அந்தப் படம் கொண்டாடப்பட்டது. முக்கியமாக சிவகார்த்திகேயனின் பாடி லாங்குவேஜும், நடிப்பும் வேறு ஒரு பரிமாணத்தில் இருந்ததாக கூறினார்கள் ரசிகர்கள்.

அடுத்த படம்: அமரன் படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனின் சம்பளத்தை உயர்த்தி வைத்திருக்கிறது. அதன்படி 50 கோடி ரூபாய்வரை அவர் சம்பளமாக வாங்குகிறார் என்றும் சொல்லப்படுகிறது. அமரன் படத்தில் நடித்து முடித்த அவர் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதனையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் நடித்துவருகிறார். அந்தப் படத்தின் டைட்டில் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரிய ரெஸ்பான்ஸை பெற்றது.
சிபி சக்கரவர்த்தியுடன் படம்: ஏ.ஆர்.முருகதாஸ், சுதா கொங்கரா இயக்கத்தில் படங்களில் நடிக்கும் அவர் டான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடனும் ஒரு படத்தில் கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் ஷூட்டிங் இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்பது தெரியவில்லை. இருப்பினும் அந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்றும்; கண்டிப்பாக இந்தப் படமும் மெகா ஹிட்டடித்து டான் படம் மாதிரி நூறு கோடி கிளப்பில் இணையும் என்றும் எஸ்கே ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
வெங்கட் பிரபு கூட்டணி: இதற்கிடையே இந்தப் படங்களுக்கெல்லாம் முன்னதாகவே வெங்கட் பிரபு இயக்கத்தில்தான் நடிக்க கமிட்டானார் சிவா. ஆனால் அந்த சமயத்தில் விஜய்யை வைத்து வெங்கட்டுக்கு GOAT படத்தை இயக்கும் வாய்ப்பு வந்ததால் அந்தப் படத்தை இயக்குவதற்கு சென்றுவிட்டார். எஸ்கேவும் அமரன் படத்தில் பிஸியாகிவிட்டார். விரைவில் அவர்கள் இரண்டு பேரும் இணையும் படத்தின் பணிகள் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவாவின் ரசிகர்கள்: இந்நிலையில் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ஒரு செயலை செய்திருக்கிறார்கள். அதாவது GOAT படத்தின் க்ளைமேக்ஸில் எஸ்கேவிடம் விஜய் துப்பாக்கியை கொடுப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். இதன் காரணமாக அடுத்த விஜய் சிவகார்த்திகேயன்தான் என்று அவரது ரசிகர்கள் கூறிய சூழலில்; தளபதி சிவகார்த்திகேயன் என்றே போஸ்டர் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் எஸ்கேவின் ரசிகர்கள். அதனைப் பார்த்த பலரும் இவ்வளவு ஸ்பீடாவா என்று ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











