அமரன் படத்துக்கு சிவகார்த்திகேயன் தப்பான தேர்வா?.. கங்குவா தயாரிப்பாளரை போட்டு பொளக்கும் ரசிகாஸ்!

சென்னை: சூர்யாவின் கங்குவா படத்துக்கு எதிராக தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்களும் திரண்டு இருப்பது கோலிவுட்டில் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியுள்ளது. அதற்கு காரணம் சமீபத்தில் அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அளித்த பேட்டிதான்.

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து தீபாவளிக்கு வெளியான அமரன் திரைப்படம் 3வது வாரத்திலும் தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

kanguva sivakarthikeyan amaran

இந்த வாரம் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 1100 தியேட்டர்களில் கங்குவா திரைப்படத்துக்கு அதிகபட்சமாக 700 தியேட்டர்கள் தான் கிடைக்கும் என்கின்றனர். அமரன் படத்தின் மூலம் நல்ல வசூலை பார்த்து வரும் தியேட்டர் ஓனர்கள் அந்த படத்தை நீக்கும் முடிவில் இல்லை என்பதை கூறி வருகின்றனர்.

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி: விஜய் டிவியில் காமெடியனாக அறிமுகமாகி அதன் பின்னர் அங்கேயே தொகுப்பாளராக மாறி மெரினா படத்தின் மூலம் நடிக்க வந்து கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களை கவர்ந்து ஏகப்பட்ட பிரபலங்களின் குட் புக்கிலும் இடம்பெற்ற சிவகார்த்திகேயன் தற்போது அஜித் குமார் வெல்கம் டு பிக் லீக் என சொல்லும் அளவுக்கு உயர்ந்து விட்டார்.

250 கோடி வசூல்: அமரன் திரைப்படம் 10 நாட்களில் 200 கோடி வசூலை கடந்த நிலையில், விரைவில் 250 கோடி வசூலை கடந்து விடும் என்றும் இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் வசூலை இன்று அல்லது நாளைக்குள் முடித்துவிடும் என்கின்றனர். இந்த வாரமும் ஹவுஸ்ஃபுல்லாக படம் ஓடினால், 250 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டும் என்கின்றனர்.

சிவகார்த்திகேயன் தப்பான தேர்வு: அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவே மாறி திரையில் ராணுவ வீரராகவே தன்னை நிரூபித்த நிலையில், அவரது உழைப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மும்பையில் அமரன் படத்தை பார்த்தேன். இங்கேயே படம் நல்லா போகுது என அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியிடம் கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் நான் கூட மிஸ் காஸ்டிங் என நினைத்தேன். ஆனால், உங்களுடைய உழைப்பு படத்தை சூப்பராக மாற்றியிருக்கிறது என ஞானவேல் ராஜா கூறியதை அப்படியே வெளிப்படையாக ராஜ்குமார் பெரியசாமி கூற சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

கடுப்பான எஸ்கே ஃபேன்ஸ்: கோலிவுட்டில் நடிகர் அஜித் குமாரின் துணிவு படத்தின் வசூலையே சிவகார்த்திகேயன் தனது விடாமுயற்சியால் கடந்து விஸ்வரூபமாக வளர்ந்து வரும் நிலையில், சூர்யாவின் கங்குவா பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சிவகார்த்திகேயன் தப்பான தேர்வு என முதலில் நினைத்ததாக பேசியது சிவகார்த்திகேயன் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது. கங்குவா படத்துக்கு எதிராகவும் அவர்களை இந்த விஷயம் திருப்பி விட்டுள்ளதாக சோஷியல் மீடியாவில் சர்ச்சை வெடித்துள்ளது.

அமரன் வசூலும் போட்டி: சூர்யாவின் கங்குவா படத்தின் பட்ஜெட்டே 300 கோடி என்பதால் அசால்ட்டாக அமரன் படத்தின் வசூலை முந்திவிடும் என சூர்யா ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால், அமரன், வேட்டையன் மற்றும் கோட் உள்ளிட்ட படங்கள் கங்குவா வசூலுக்கு பலமான போட்டியாக பாக்ஸ் ஆபிஸில் இருக்கும் என்கிற கருத்துக்களும் சினிமா வட்டாரத்தில் நிலவுகிறது. வரும் நவம்பர் 14ம் தேதி முதல் நாள் வசூல் எந்தளவுக்கு இருக்கிறதோ அதை பொறுத்து தான் பெரியளவிலான வசூல் அமையும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X