70 கோடியை தாண்டிய வசூல்.. மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன்.. டிரெண்டாகும் #MegaBlockBusterDOCTOR

சென்னை: சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் 70 கோடி ரூபாய் வசூலை தாண்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், டாக்டர் படத்தை பிளாக்பஸ்டர் திரைப்படமாக மாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து சிவகார்த்திகேயன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் #MegaBlockBusterDOCTOR எனும் ஹாஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

70 கோடி வசூல்

70 கோடி வசூல்

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகி பாபு, வினய், அர்ச்சனா, தீபா, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 70 கோடி ரூபாய் வசூலை தாண்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எதற்கும் அஞ்சாமல்

எதற்கும் அஞ்சாமல்

கொரோனாவுக்கு பிறகு மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் திரையரங்குகளில் படங்களை வெளியிட சூர்யா போன்ற முன்னணி நடிகர்களே தயக்கம் காட்டி வரும் நிலையில், தைரியமாக படத்தை வெளியிட்டு மக்கள் கூட்டத்தை தியேட்டர் நோக்கி வரவழைத்த சிவகார்த்திகேயனுக்கு மக்கள் பெரும் வெற்றியை பரிசாக அளித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் நன்றி

சிவகார்த்திகேயன் நன்றி

டாக்டர் திரைப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் சக்கைப் போடு போட்டு வரும் நிலையில், ரசிகர்களின் ஆரவார வீடியோவுடன் தனது நன்றியையும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். தன்னுடைய ரசிகர்கள், மற்ற நடிகர்களின் ரசிகர்கள், மீடியா, விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என பலருக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.

மெகா பிளாக்பஸ்டர்

மெகா பிளாக்பஸ்டர்

சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக வசூலை ஈட்டி மெகா பிளாக்பஸ்டர் படமாக அதுவும் கொரோனா காலத்தில் டாக்டர் இப்படியொரு இமாலய வசூல் சாதனையை படைத்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள் #MegaBlockBusterDOCTOR எனும் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பீஸ்ட் வெறி

பீஸ்ட் வெறி

டாக்டர் படம் இந்தளவுக்கு திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்த சிவகார்த்திகேயனையும் தாண்டி இயக்குநர் நெல்சன் மீதான எதிர்பார்ப்பு தான் என்றும் கூறுகின்றனர். விஜய்யின் பீஸ்ட் படம் எப்படி இருக்கப் போகுது என அறிந்து கொள்ளும் ஆர்வத்திலேயே ஏகப்பட்ட விஜய் ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக டாக்டர் படத்தை பார்த்து ஹிட்டாக்கி உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ள அந்த Other fans விஜய் ரசிகர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற நடிகர்களின் ரசிகர்களும் டாக்டர் படத்தை தியேட்டர்களில் என்ஜாய் பண்ணி வருகின்றனர்.

தோல்விக்கு அடுத்து வெற்றி

தோல்விக்கு அடுத்து வெற்றி

மிஸ்டர் லோக்கல் படம் ஃபிளாப் ஆன உடனே சிவகார்த்திகேயன் அடுத்ததாக நம்ம வீட்டு பிள்ளை படம் மூலம் வெற்றியை கொடுத்தார். ஹீரோ படம் தோல்வியை தழுவிய நிலையில், டாக்டர் எனும் தரமான சம்பவத்தை செய்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளார் என சிவகார்த்திகேயனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X