இது காக்கி சட்டை.. ஜன நாயகன் ‘ஒரு பேரே வரலாறு’ பாடலை எஸ்கே ரசிகர்கள் இப்படி கலாய்க்கிறாங்களே!

சென்னை: தளபதி விஜய்யின் படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் என எது வந்தாலுமே அதனை அஜித் ரசிகர்கள், ரஜினிகாந்த் ரசிகர்கள் உள்ளிட்டோர் எதிர்த்து ட்ரோல் செய்ததை பல வருடங்களாக பார்த்துள்ளோம். இந்த முறை அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சேர்ந்துக் கொண்டனர்.

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் ஜன நாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட படங்கள் மோதவுள்ள நிலையில், இப்போதே இரு தரப்புக்கும் இடையேயான ஆன்லைன் வார் ஆரம்பித்து விட்டது.

Sivakarthikeyan fans trolled Vijay s Jana Nayagan second single Oru Pere Varalaru
Photo Credit:

ஈரோட்டில் வள்ளுவர் கோட்டம் பற்றி விஜய் பேசிய நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மேலும், தீவிரமாக ஜன நாயகன் படத்தை ட்ரோல் செய்யத் தொடங்கிவிட்டனர்.

ஒரு பேரே வரலாறு: அனிருத் இசையில், விவேக் வரிகளில் உருவான "ஒரு பேரே வரலாறு" பாடல் நேற்று வெளியானது. இதுவரை 12 மில்லியன் வியூஸ் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. கூடிய சீக்கிரமே 15 மில்லியன் வியூஸ் இந்த பாடல் கடந்து விடும் என தெரிகிறது. எப்போதுமே விஜய் பட பாடல் வந்தால், அது எங்கே இருந்து காப்பியடிக்கப்பட்டது. அது எந்த பாடல் போல உள்ளது போன்ற விமர்சனங்களும் ட்ரோல்களும் அதிகமாகவே இருப்பது வழக்கம். என்னடா ஜன நாயகன் செகண்ட் சிங்கிளான "ஒரு பேரே வரலாறு" பாட்டுக்கு அப்படி ஏதும் பெரிதாக வரவில்லையே என நினைத்த ரசிகர்களுக்கு, சிவகார்த்திகேயன் ரசிகர்கள் செம சர்ப்ரைஸ் கொடுத்து பங்கம் செய்து வருகின்றனர்.

இது காக்கி சட்டை: துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை படத்தின் இன்ட்ரோ பாடலான "இது காக்கி சட்டை" பாடலில் சிவகார்த்திகேயன் ஆடுவதை போலத்தான் விஜய் "ஒரு பேரே வரலாறு" பாடலில் ஆடுகிறார் என அந்த பாடலை கம்பேர் செய்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இதில், காமெடி என்னவென்றால், அந்த படத்துக்கும் அனிருத் தான் மியூசிக்.

கடுப்பான விஜய் ரசிகர்கள்: தளபதி டான்ஸ் பக்கத்துல கூட சிவகார்த்திகேயன் வர முடியாது என்றும் இப்படி ட்ரோல் பண்ணுவதற்கெல்லாம் பொங்கல் போட்டியில் செமத்தியாக வாங்க போறீங்க என விஜய் ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கடித்து வைத்து வருகின்றனர். பொங்கல் வரைக்கும் ஏகப்பட்ட ஆன்லைன் என்டர்டெயின்மென்ட் உறுதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X