விஜய் ரூட்டை காப்பியடிக்கிறாரா சிவகார்த்திகேயன்? மாவீரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் உள்ள சீக்ரெட்!
சென்னை: ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யை அப்படியே காப்பியடிக்கிறார் சிவகார்த்திகேயன் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் மற்றும் மிஷ்கின் நடிப்பில் மாவீரன் திரைப்படம் உருவாகி உள்ளது.
அடுத்த மாதம் ஜூலை 14ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், ஆடியோ வெளியீட்டு விழாவை எங்கே எப்போது சிவகார்த்திகேயன் நடத்த திட்டமிட்டுள்ளார் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன.

விஜய் பாணியில் சிவகார்த்திகேயன்: ஜேப்பியார் கல்லூரியில் இருந்து சாய்ராம் கல்லூரிக்கு மாவீரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சிவகார்த்திகேயன் மாற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் விஜய் சாய் ராம் கல்லூரியில் தனது திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாவை நடத்தி வந்த நிலையில், அந்த இடத்தை பிடித்து விட்டார் சிவகார்த்திகேயன் எனக் கூறுகின்றனர்.
மாவீரன் ஆடியோ வெளியீட்டு விழா தேதி: வரும் ஜூலை 2ம் தேதி பிரம்மாண்டமாக மாவீரன் இசை வெளியீட்டு விழா சாய்ராம் கல்லூரியில் நடைபெற உள்ளதாக கூறுகின்றனர்.
மேலும், அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நேரு ஸ்டேடியத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு படு பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக நடிகர் சிம்பு பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவை வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்ததை போலவே நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தி இருந்தார்.
ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் பெரிதாக ஓடவில்லை. வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அடி வாங்கியது குறிப்பிடத்தக்கது.
பாடல்கள் ரொம்ப சுமார்: சிவகார்த்திகேயனும் அனிருத்தும் இணைந்தால் பாடல்கள் தாறுமாறாக வந்து விழும் ஆனால், பிரின்ஸ் படத்திற்கு தமன் இசையமைத்த போதே பாடல்கள் படு சுமராக வந்த நிலையில், தற்போது மாவீரன் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியான நிலையிலும், எந்தவொரு பாடலும் சூப்பர் ஹிட் அடிக்காதது சிவகார்த்திகேயனுக்கே மனதளவில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறுகின்றனர்.
ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த மாவீரன் திரைப்படம் ஹிட் அடித்தால் தான் சிவகார்த்திகேயன் கம்பேக் கொடுக்க முடியும் என்கின்றனர். அயலான் படத்திற்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசை என்பதால் கூடிய சீக்கிரமே சிவகார்த்திகேயன் அனிருத் காம்போவை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











