இயக்குநருக்கு பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன்.. எஸ்கேவுக்கு தங்கமான மனசு ப்பா
சென்னை: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கிட்டத்தட்ட அந்தப் படம் 350 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் மீது அவரும் அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டில் டாப் கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவர். டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களும் அவரை முதன்முறையாக நூறு கோடி ரூபாய் க்ளப்பில் சேர்த்தது. ஆனால் அடுத்ததாக அவர் நடித்த பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வியை சந்திக்க; சுதாரித்துக்கொண்ட எஸ்.கே. மாவீரன் திரைப்படத்தில் நடித்து தன்னை மீட்டெடுத்துக்கொண்டார். அந்தப் படம் கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய்வரை வசூலித்தது. அடுத்து வெளியான அயலான் திரைப்படமும் மெகா ஹிட்டாகி நல்ல வசூலை செய்தது.
அமரன் மெகா ஹிட்: இப்படி ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த சிவகார்த்திகேயனை உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்தியது அமரன் திரைப்படம். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் அந்தப் படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. உலகளவில் அந்தப் படம் 350 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் ஓடிடியிலும் படத்துக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. அமரன் படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை விரிவுப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த படங்கள்: அவர் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்திலும் நடித்துவருகிறார். இரண்டு படங்களுமே அவரது கரியரில் முக்கியமான படங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு படங்கள் மட்டுமின்றி டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் நடிப்பதாக இருந்தார். ஆனால் அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டதாக இப்போது சொல்லப்படுகிறது.
வெங்கட் பிரபுவுடன் கூட்டணி: இதற்கிடையே ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம் நடக்கவிருந்தது. ஆனால் அந்த சமயத்தில் விஜய்யின் GOAT படத்தை இயக்க சென்றுவிட்டார் வெங்கட். எஸ்கேவும் அமரனுக்கு சென்றுவிட்டார். தற்போது மீண்டும் அவர்கள் இணைவார்களா என்று ரசிகர்களிடம் கேள்வி எழுந்திருந்தது. மிக விரைவில் அவர்கள் இணையும் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று கோலிவுட்டில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன்: மேலும் குட் நைட் பட இயக்குநருடனும் அவர் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் ஓடியது. இந்நிலையில் அந்தப் படத்தின் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி அவரை நேரில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பரிசு ஒன்றையும் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து எஸ்கேவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "வாழ்த்துகள் மற்றும் பரிசுக்கு நன்றி சிவகார்த்திகேயன் அண்ணா. இந்த வருட பிறந்தநாளை மேற்கொண்டு சிறப்பாக்கியாது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











