டாக்டர் ரிலீசுக்காக மொத்த சமபளத்தையும் கொடுத்த சிவகார்த்திகேயன்
சென்னை : டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். மார்ச் மாதமே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டிய இந்த படம் பல காரணங்களால் தள்ளிப் போனது. பிறகு மே மாதம் கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது.
பிரியங்கா அருள் மோகன் ஜோடியாக நடித்துள்ள இந்த படம் காமெடி, த்ரில்லர், என்டர்டைன்மென்ட் படமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தியேட்டர் ரிலீஸ்
ஆனால் கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் டாக்டர் படத்தின் ரிலீஸ் எப்போது என தெரியாத நிலை ஏற்பட்டது. தியேட்டர்கள் தொடர்ந்து மூடப்பட்டிருந்ததால் டாக்டர் படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகே படம் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு திட்டவட்டமாக அறிவித்தது.

வரவேற்பை பெற்ற டிரைலர்
இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்பட்ட டாக்டர் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளான செல்லம்மா...செல்லம்மா பாடல் வெளியிடப்பட்டு, மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. செம ஹிட்டான இந்த பாடலின் வீடியோ க்ளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. முன்னதாக வெளியிடப்பட்ட டாக்டர் படத்தின் டிரைலரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

வரவேற்பை பெற்ற டாக்டர்
இந்நிலையில் டாக்டர் படம் இன்று தியேட்டரில் வெளியிடப்பட்டது. மிகுந்த போராட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டமும் சொல்லிக் கொள்ளும்படி இருந்தது.

சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்
இந்நிலையில் டாக்டர் படத்தை ரிலீஸ் செய்வதற்காக சிவகார்த்திகேயன் தனது ஒட்டுமொத்த சம்பள தொகையையும் கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் பைனான்சியர் அன்புவிற்கு உதவுவதற்காக சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை கொடுத்துள்ளாராம். அப்படி சிவகார்த்திகேயன் இந்த தொகையை கொடுக்காமல் இருந்திருந்தால் இன்று டாக்டர் படம் ரிலீசாகி இருக்காதாம்.

பாராட்டும் ரசிகர்கள்
இந்த தகவல் வெளியானது முதல் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அவரை பலவிதங்களில் பாராட்டி வருகின்றனர். தனது படங்களின் ரிலீசுக்கு சிவகார்த்திகேயன் பல தியாகங்களை செய்து வருவதாக பலரும் புகழ்ந்துள்ளனர். இரண்டு ஆண்டுகளாக சிவகார்த்திகேயனின் எந்த படமும் ரிலீசாகாத நிலையில், டாக்டர் படம் எப்படியும் ரிலீஸ் செய்யப்பட வேண்டும் என்பதற்காக தான் சிவகார்த்திகேயன் இதை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

டிரெண்டிங்கில் டாக்டர்
டாக்டர் படம் இன்று ரிலீஸ் ஆவதை முன்னிட்டு, ட்விட்டரில் சிவகார்த்திகேயன், டாக்டர் போன்ற ஹாஷ்டேக்குகள் இன்று நாள் முழுவதும் டிரெண்டிங்கில் இருந்தன. இதில் டாக்டர் படம் வெற்றி பெற ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











