AK & SK: அஜித்துக்கு கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சிவகார்த்திகேயன்.. இந்த வீடியோவ பார்த்தீங்களா?

அபுதாபி: நடிகர் அஜித்குமார் கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் இருந்தே கார் ரேஸில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அபுதாபியில் நடைபெற்று வரும் கார் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் அஜித்தை நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டும் இல்லாமல், ரேஸ் காரை ஓட்டி முடித்து அஜித் வெளியே வந்ததும் அஜித்தை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அஜித்திற்கு தமிழ் சினிமாவில் அனைவருடனும் நட்பு பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், எந்தவிதமான சினிமா பின்புலமும் இல்லாமல் திரை உலகில் தனக்கான இடத்தை பிடிக்க போராடுபவர்களை மிகவும் பிடிக்கும். அதே நேரத்தில் திறமைசாலிகளாக இருந்து வெற்றி பெறாமல் இருந்தாலும் அவர்களை அழைத்து ஊக்குவிப்பதோ, அல்லது தனது படத்தில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதோ என எப்போதும் உறுதுணையாகவே இருந்துள்ளார்.

Sivakarthikeyan gives a kiss to Ajith Kumar in Abu Dhabi Viral Video of heartfelt hug goes trending

இதற்கு எல்லாம் அடிப்படைக் காரணம் நடிகர் அஜித்தே எந்த பின்புலமும் இல்லாமல் தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர். இதனாலே அஜித்திற்கு இயல்பாகவே இந்த குணம் இருக்கிறது. அஜித்தின் இந்த விடாமுயற்சியை பார்த்தே, பலரும் நம்பிக்கையுடன் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளனர்.

அஜித்: இப்படியானவர்களில் அஜித்திற்கு எப்போதுமே நடிகர் சிவகார்த்திகேயனின் நலன் மற்றும் வளர்ச்சி மீது தனி அக்கறை உண்டு. இது தொடர்பாக சிவகார்த்திகேயனே சில பேட்டிகளில் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அஜித் சாரிடம் பேசினால் அதுவரை இல்லாத அளவுக்கு வாழ்க்கை தெளிவு கிடைத்துவிடும். ஒரு நம்பிக்கை கிடைக்கும். புது ரத்தம் பாய்ந்தது போன்ற உணர்வு வரும்" என்று எல்லாம் தெரிவித்துள்ளார்.

ஆரவாரம்: இந்நிலையில் நடிகர் அஜித்தை அபுதாபியில் உள்ள கார் ரேஸிங் டிராக்கிற்கு சென்று சந்தித்துள்ளார் சிவகார்த்திகேயன். அஜித்தை பார்த்ததும் அவரை ஆரத்தழுவி கட்டிப்பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தி வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், அஜித் ரேஸ் கார் ஓட்ட தயாராக நின்று கொண்டு இருந்தபோது, அவருக்குப் பின்னால் நின்று கொண்டு, கைதட்டி, தம்ஸ் அப் சொல்லி, மகிழ்ச்சியில் கத்தி வாழ்த்து சொன்னார் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan gives a kiss to Ajith Kumar in Abu Dhabi Viral Video of heartfelt hug goes trending

முத்தம் கொடுத்த எஸ்.கே: அதன் பின்னர் நடிகர் அஜித் தனது ரேஸை முடித்துவிட்டு வந்த பின்னர், அஜித்தை நோக்கி வேகமாக சென்று அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் சிவகார்த்திகேயன். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது மட்டும் இல்லாமல், தான் இயக்கும் காரின் செயல்பாடு குறித்து எல்லாம் சிவகார்த்திகேயனுக்கு விளக்குகிறார் நடிகர் அஜித். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் தான் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X