அரபிக் குத்து பாட்டுக்கு வாங்கிய சம்பளத்தை.. சிவகார்த்திகேயன் என்ன பண்ணாரு தெரியுமா?

சென்னை: காமெடியன், தொகுப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையோடு தமிழ் சினிமா ரசிகர்கள் நெஞ்சில் இடம்பிடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

கோலமாவு கோகிலா படத்தில் "எனக்கு கல்யாண வயசு தான் வந்துடுச்சு டி" எனும் பாடலை எழுதி பிரபலமான சிவகார்த்திகேயன் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் படங்களுக்கு பாடல்களை எழுதி வருகிறார்.

சமீபத்தில் பீஸ்ட் படத்திற்காக அரபிக் குத்து எனும் பாடலை எழுதிய சிவகார்த்திகேயன் அதற்காக பெற்றத் தொகையை என்ன செய்தார் என்கிற தகவல் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

அரபிக் குத்து

அரபிக் குத்து

பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான அரபிக் குத்து பாடலின் புரமோ சமீபத்தில் வெளியாகி டிரெண்டானது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில், அந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி உள்ளார். வரும் காதலர் தின கொண்டாட்டமாக அந்த பாடல் வெளியாகிறது.

சிவகார்த்திகேயன் வரிகள்

சிவகார்த்திகேயன் வரிகள்

நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தில் இடம்பெற்ற "எனக்கு கல்யாண வயசு தான் வந்துடுச்சு டி" பாடல் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தில் செல்லம்மா பாடலை எழுதியிருந்தார். சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் சும்மா சுர்ருன்னு பாடலை எழுதிய சிவகார்த்திகேயன் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடலையும் எழுதியுள்ளார்.

சம்பளம் எவ்வளவு

சம்பளம் எவ்வளவு

சிவகார்த்திகேயன் எழுதும் பாடல்கள் எல்லாம் வேற லெவலில் ஹிட் அடித்து வரும் நிலையில், பல லட்ச ரூபாய் சம்பளமாக பெற்று வருகிறார் என்றும் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு அதிகளவில் அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அதைவிட அந்த சம்பளத்தை அவர் என்ன செய்தார் என்னும் தகவல் தான் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

நா முத்துகுமார் குடும்பத்துக்காக

நா முத்துகுமார் குடும்பத்துக்காக

மறைந்த பிரபல பாடலாசிரியர் நா முத்துகுமார் குடும்பத்துக்கு அந்த தொகையை நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரது நல்ல மனதையும் பழசை மறக்காத குணத்தையும் பாராட்டி வருகின்றனர்.

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் இடம்பெற்ற "தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் பின்னே" பாடலை நா முத்துகுமார் எழுதியிருந்தார். விஜய் அவார்ட்ஸ் மேடையில் சிவகார்த்திகேயன் தனது தந்தையை நினைத்து உருகும் போதும் இதே பாடலை இசைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X