SK 21 Update - அட எஸ்கே 21 கதை இதுதானா?.. சிவகார்த்திகேயன் ஜிம் ட்ரெய்னர் சொன்ன சீக்ரெட்

சென்னை: சிவகார்த்திகேயன் கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அயலான் திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்து வசூலிலும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது. தற்போது அவர் தனது 21ஆவது படத்தில் நடித்துவருகிறார். விஜய் அரசியலுக்கு சென்றிருப்பதால் அவரது இடத்தை நிரப்புவதற்கு சிவகார்த்திகேயன் மட்டும்தான் இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். தேர்ந்தெடுக்கும் கதைகள் கமர்ஷியலாக இருப்பதால் சிறுவர், சிறுமிகள் மத்தியில் அவருக்கு நல்ல கிரேஸ் உண்டு. அதேபோல் குடும்பத்தினரும் சிவாவின் படங்களை விரும்பி பார்க்கின்றனர். விஜய்யும் இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதால் கண்டிப்பாக அவர் இடத்தை சிவகார்த்திகேயன் ரீப்ளேஸ் செய்வார் என்று எஸ்கே ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர். அவரது நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.

Sivakarthikeyan Gym Trainer Talks about SK 21 Movie Story

அடுத்த படங்கள்: அயலான் படத்தின் வெற்றி அவரை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் அதற்கு முன்னதாக வெளியான மாவீரன் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். அதனையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

வசூல் வேட்டை: இந்த பொங்கல் ரேஸ் சிவகார்த்திகேயனுக்கு முக்கியமானதாகவே கருதப்பட்டது. ஏனெனில் அயலான் திரைப்படத்துக்கு போட்டியாக தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. தனுஷால் சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர். எனவே இதில் தனுஷை சிவா வெல்வாரா என்று எதிர்பார்ப்பு எழுந்தது. எஸ்கே ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் வென்றுவிட்டார் என்றே பலரும் சொல்கிறார்கள். ஏனெனில் அயலான் திரைப்படத்தின் வசூல் 75 கோடி ரூபாயை தாண்டிவிட்டது.

எதிர்பார்ப்பில் எஸ்கே 21: தொடர்ந்து இரண்டு படங்கள் வெற்றி படங்களாக சிவகார்த்திகேயனுக்கு அமைந்திருக்கின்றன. இதனால் அவரும் அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஹாட்ரிக் வெற்றியாக அவர் தற்போது நடித்துவரும் எஸ்கே 21 படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் இருக்கிறது.படத்துக்கு போர்கண்ட சிங்கம் என்று பெயர் வைக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. முக்கியமாக ராணுவ வீரர் ஒருவரின் பயோபிக்காக இந்தப் படம் உருவாவது குறிப்பிடத்தக்கது.

ஒர்க் அவுட் வீடியோ: படத்திலிருந்து சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியானது. ஜிம்மில் சிவகார்த்திகேயன் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன. அதனை பார்த்த ரசிகர்கள் மனுஷன் வெற்றித்தனமா ஒர்க் அவுட் செய்றாரே. படத்தில் வேறு மாதிரியான சிவகார்த்திகேயன் வருவார் போல என உற்சாகத்துடன் கமெண்ட்ஸ் செய்தனர். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் ஜிம் ட்ரெய்னர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.

ஜிம் ட்ரெய்னர் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "சிவகார்த்திகேயன் இந்தப் படத்துக்காக தயாராக மூன்று மாதங்கள் மட்டுமே இருந்தது. அதற்குள் அவர் தன்னை தயார்படுத்திக்கொண்டார். ஒர்க் அவுட் செய்யும்போது ஆரம்பத்தில் சில கஷ்டங்களை அவர் சந்தித்தார். இருப்பினும் முழுவதுமாக தன்னை அவர் அர்ப்பணித்துக்கொண்டார். அதன் பலனை கண்டிப்பாக அவரது ரசிகர்கள் திரையில் பார்ப்பார்கள். இதில் வித்தியாசமான சிவகார்த்திகேயனாக இருப்பார். இந்தப் படம் ராணுவ வீரர் ஒருவரிடம் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகியுள்ளது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X