அமரன் சிவகார்த்திகேயனுக்கு எவ்வளவு பெரிய மனசு.. நிதியுதவி கொடுத்த எஸ்கே.. ஏன் தெரியுமா?

சென்னை: சிவகார்த்திகேயன் காட்டில் வெற்றி மழை பொழிந்துகொண்டிருக்கிறது என்பதுதான் கோலிவுட்டில் பலரின் கருத்து. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அமரன், அயலான், மாவீரன் ஆகிய மூன்று படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம், சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு, சிபி சக்கரவத்தி இயக்கத்தில் ஒரு படம், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார் அவர்.

சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரைக்குள் வந்தவர். இப்போது வெள்ளித்திரையின் சக்சஸ்ஃபுல் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார் அவர். இடையில் அவர் நடித்த பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அப்போது பலரும், சிவகார்த்திகேயனின் கரியர் இனி அவ்வளவுதான் என்று ஓபனாகவே சொன்னார்கள். ஆனால் அந்த சீன்லாம் இங்கே இல்லை என்பதுபோல் பிரின்ஸ் படத்துக்கு பிறகு அவர் நடித்த மாவீரன் திரைப்படம் மெகா ஹிட்டானது.

sivakarthikeyan udhayanithi stalin

அமரன் சிவா: அதேபோல் அயலான் திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்படி வரிசையாக இரண்டு படங்கள் வெற்றியாக கொடுத்த எஸ்கே மூன்றாவதாக அமரன் படத்தில் நடித்தார். இந்தப் படமும் மெகா ஹிட்டாகி ஹாட்ரிக் ஹிட்டாக வேண்டும் என்பது எஸ்கே ரசிகர்களின் ஆசையாக இருந்தது. அதனை நிறைவேற்றும்படி படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டது. மொத்தம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூல் செய்திருக்கிறது.

உச்சக்கட்ட மகிழ்ச்சி: இதன் காரணமாக சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மட்டுமின்றி எஸ்கேவும் செம ஹேப்பியில் இருக்கிறாராம். மேலும் அடுத்த படங்களுக்கு தனது சம்பளத்தை 60 கோடி ரூபாய்வரை உயர்த்தியிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. அடுத்ததாக அவரது கையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம், வெங்கட் பிரபு இயக்கத்திலும், சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் ஒரு படம், சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு ஆகிய படங்கள் இருக்கின்றன.

பிரச்னையா?: புறநானூறு படம் முதலில் சூர்யாவுக்கு சென்றது. அவர் விலகிய பிறகு உள்ளே வந்தார் சிவா. இதில் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. அதாவது படத்தின் அறிவிப்புக்காக ஒரு வீடியோவை சுதா ஷூட் செய்தார் என்றும்; அந்த ஷூட்டுக்கு ஓவர் தாடியுடன் சிவா வந்ததால் சுதா கொங்கரா கத்திவிட்டார்; இதன் காரணமாக டென்ஷனாகி ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து சிவா கிளம்பிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

பத்து லட்சம் நிதி: இந்நிலையில் சிவகார்த்திகேயன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்திருக்கிறார். அந்த சந்திப்பின்போது சமீபத்தில் வந்த ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கு பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார். அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன. அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அமரன் சிவகார்த்திகேயனுக்கு பெரிய மனது. முதல் ஆளாக நிதியுதவி கொடுத்திருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X