அனிருத்துக்காக தனுஷ் செய்த அதே வேலையை செய்த சிவகார்த்திகேயன்
சென்னை: கோலமாவு கோகிலா படம் மூலம் சிவகார்த்திகேயன் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்தவர் சிவகார்த்திகேயன். நடிப்பது தவிர படங்களை தயாரிக்கவும் செய்கிறார்.
இந்நிலையில் அவர் மேலும் ஒரு அவதாரம் எடுத்துள்ளார்.

நயன்தாரா
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் வரும் கல்யாண வயசு பாடலை எழுதியவர் யார் என்று கண்டுபிடிக்குமாறு இசையமைப்பாளர் அனிருத் ரசிகர்களிடம் கேட்டிருந்தார். இந்நிலையில் அவரே பதிலையும் அளித்துள்ளார்.
சிவகார்த்திகேயன்
கல்யாண வயசு பாடலை எழுதியது வேறு யாரும் அல்ல நம்ம சிவகார்த்திகேயன் தானாம். சிவகார்த்திகேயன் பாடல் ஆசிரியராகியுள்ளதை அனிருத் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
நன்றி
அனிருத்தின் ட்வீட்டை பார்த்த சிவகார்த்திகேயன் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். நெல்சன் அண்ணனுடன் பணியாற்றியது மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

ஹீரோயின்
ராஜேஷ் இயக்கி வரும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முன்னதாக அவர்கள் வேலைக்காரன் படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











