நான் அடுத்த தளபதியா?.. அமரன் விழாவில் ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்.. க்ளியரா சொல்லிட்டாரே
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் அமரன். கமல் ஹாசன் தயாரித்திருக்கும் இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார். அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படமானது ரிலீஸாகவிருக்கும். இன்னும் ஒரு மாதம் ரிலீஸுக்கு இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் ஆரம்பித்திருக்கின்றன. இந்தச் சூழலில் அமரன் பட விழாவில் சிவகார்த்திகேயன் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
சின்னத்திரையில் தனது கரியரை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் பெரிய ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். விஜய் எப்படி தான் வளர்ந்துவந்த காலத்தில் சிறுவர்கள், சிறுமிகள், குடும்பத்தினரை கவர்ந்தாரோ அதேபோல் சிவாவும் வளர்ந்திருக்கிறார். அதனை விஜய்யும் ஒரு மேடையில் பாராட்டி பேசியிருந்தார். எஸ்கே நடிப்பில் கடைசியாக வெளியான அயலான், மாவீரன் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்தன. வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.

அமரன்: இப்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ரங்கூன் படத்தை இயக்கி மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இதில் சாய் பல்லவி ஹீரோயின். அயலான், மாவீரன் வெற்றிகளை தொடர்ந்து இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து சிவா ஹாட்ரிக் வெற்றியை பெறுவார் என்று அவரது ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்கள்.
உண்மை சம்பவம்: இந்திய ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இதன் க்ளிம்ப்ஸ், டீசர் உள்ளிட்டவைகள் எல்லாம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. மேலும் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் பக்காவாக ஃபிட்டாகியிருக்கிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படமானது அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் பேச்சு: இந்நிலையில் அமரன் பட விழாவில் பேசிய சிவகார்த்திகேயனிடம் நீங்கள்தான் அடுத்த தளபதியா என்று ரசிகர்கள் கேள்விகள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "கண்டிப்பாக அப்படி கிடையாது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரே ஒரு தளபதிதான். ஒரே ஒரு தலதான். ஒரே ஒரு உலகநாயகன் தான். ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அவர்களின் நடிப்பை பார்த்து சினிமாவை கற்றவன் நான். அவர்களைப் போன்று கடினமாக உ ழைத்து நல்ல திரைப்படங்களை கொடுக்க ஆசைப்படலாம். ஆனால் அவர்களாகவே ஆசைப்படுவது தவறு" என்றார்.
GOAT சிவகார்த்திகேயன்: இதற்கிடையே விஜய் நடிப்பில் வெளியான GOAT படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோல் செய்திருந்தார். அந்த சீனில் துப்பாக்கியை சிவாவின் கைகளில் விஜய் கொடுத்து, கிரவுண்டில் இருக்கும் உயிர்கள் இப்போது உங்கள் கைகளில் என்று சொல்லும்படி வசனம் வந்தது. அதற்கு சிவாவோ, நீங்கள் எதோ முக்கியமான வேலையாக போகிறீர்கள். நீங்கள் அதை பாருங்க. நான் இதை பார்த்துக்கொள்கிறேன் என்று பதில் சொல்லும்படி இருந்தது. இதனைப் பார்த்த ரசிகர்கள், சிவாதான் தனது இடத்தை நிரப்பப்போகிறார் என்று விஜய்யே சொல்லிவிட்டார் என கமெண்ட்ஸ் செய்துவந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











