மகனுக்கு மாதம் 5 லட்சம் சம்பளம்.. வாழ்க்கை கொடுத்த சிவகார்த்திகேயன்.. நெகிழும் நடிகர்.. சூப்பர் மனிதர்
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக சேயோன் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. அதனை தாய் கிழவி இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்குகிறார். கடைசியாக எஸ்கே நடித்த பராசக்தி சரியாக போகாவிட்டாலும்; சேயோன் படத்தின் அறிவிப்பு வீடியோவை பார்த்து இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட நம்பிக்கை வைத்திருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க அவரது உதவும் குணம் பற்றி அவ்வப்போது செய்திகள் வருவதுண்டு. இந்நிலையில் நடிகர் பிரேம்குமார் கூறியிருக்கும் விஷயம் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் இப்போது ஃபுல் ஃபார்மில் இருக்கிறார். அமரன் படத்தின் மெகா வெற்றி அவரது கரியரையே மாற்றி வைத்திருக்கிறது. அந்த வெற்றி கண்டிப்பாக பராசக்தியிலும் தொடரும் என்றுதான் எஸ்கேவும், அவரது ரசிகர்களும் எதிர்பார்த்தார்கள். ஆனால் சுதா கொங்கராவின் மேக்கிங் சொதப்பிவிட்டதால் ஒட்டுமொத்தமாக படம் படுத்துவிட்டது. ஆனாலும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூலித்துவிட்டதாக டான் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அது கொஞ்சம் ரசிகர்களுக்கு நிம்மதி கொடுத்தது.

அடுத்த படம்: அடுத்ததாக அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டதாக தெரிகிறது. அதற்கு பதிலாக தாய் கிழவி இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடிக்க கமிட்டாகிவிட்டார். அந்தப் படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. சில மாதங்களுக்கு முன்புதான் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி பட்டைய கிளப்பியது. பக்கா ரூரல் சப்ஜெக்ட்டாக இது உருவாவது உறுதியாகியிருக்கிறது. சேயோனுக்கு பிறகும் சிவக்குமார் இயக்கத்திலேயே இன்னொரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறாராம் எஸ்கே.
எதிரிகள் ஜாஸ்தி: சிவாவின் வளர்ச்சி இப்போது உச்சத்தில் இருக்கிறது. ஆனால் அவரது வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் இன்னமும் சிலர் பிதற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தனக்கு எதிராக பேசுபவர்களை அவர் கண்டுகொள்வதே இல்லை. எவ்வளவு தன்னை பற்றி விமர்சனங்கள், கிண்டல்கள் எழுந்தாலும் அடுத்தவர்களுக்கு உதவும் குணத்தை எப்போதும் இழக்கவில்லை. அது பலரிடமும் அவருக்கு பாராட்டையும், நல்ல பெயரையும் பெற்றுக்கொடுத்திருக்கிறது.
நா. முத்துக்குமார் குடும்பத்துக்கு: எஸ்கே பாடல் எழுதுவது ஒருதரப்பிடம் விமர்சனத்தை சந்தித்தது. ஆனால் தான் பாடல் எழுதுவதால் தனக்கு வரும் சம்பளத்தை அப்படியே மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் குடும்பத்துக்கு சிவகார்த்திகேயன் கொடுத்துவருகிறார். அதேபோல் மற்ற பலருக்கும் உதவிகளை செய்துவருகிறார். அதுகுறித்து இயக்குநர் இரா.சரவணன் உள்ளிட்டோரும் பகிர்ந்திருக்கிறார்கள். இந்நிலையில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நீண்ட காலம் நடித்துவரும் பிரேம் நெகிழ்ச்சியான ஒரு தகவலை தெரிவித்திருக்கிறார்.
பிரேம் பேட்டி: சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய அவர், "எனது மகனுக்கு நெதர்லாந்தில் படிப்பதற்கு சீட் கிடைத்துவிட்டது. ஆனால் பணம் 50 லட்சம் ரூபாய் இல்லை. என்னிடம் சொத்து என்று பார்த்தால் வீடு மட்டும்தான் இருந்தது. அதுவும் EMIல் இருப்பதால் வங்கியும் கடன் கொடுக்கவில்லை. உடனே சிவகார்த்திகேயனிடம் நிலைமையை சொன்னேன். உடனே அவர் 50 லட்சம் ரூபாயை எதுவும் கேட்காமல் கொடுத்தார். எனது மகன் இன்று மாதம் நான்கு, ஐந்து லட்சம் சம்பாதிக்கிறான் என்றால் அதற்கு காரணம் சிவாதான். அவர் உதவி செய்யவில்லை. வாழ்க்கை கொடுத்திருக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications















