twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்: ரொம்ப பெரிய மனசு

    By Siva
    |

    Recommended Video

    மாணவியின் மருத்துவ படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

    சென்னை: கஜா புயலில் விழுந்த குடிசை வீட்டில் வாழும் ஏழை மாணவியின் மருத்துவ படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

    தஞ்சை பேராவூரணி அருகில் உள்ள பூக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் சஹானா. கஜா புயலில் சேதமடைந்த குடிசை வீட்டில் வசித்து வரும் அவர் பிளஸ் 2 தேர்வில் 600க்கு 524 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

    இது குறித்து ஆசிரியர் ஒருவர் ட்வீட் செய்தார்.

    மாப்பிள்ளை விசாகனுக்காக கதை கேட்ட ரஜினி.. ஓகே சொன்ன கார்த்திக் சுப்புராஜ்.. அப்போ தனுஷ்? மாப்பிள்ளை விசாகனுக்காக கதை கேட்ட ரஜினி.. ஓகே சொன்ன கார்த்திக் சுப்புராஜ்.. அப்போ தனுஷ்?

    மதிப்பெண்

    மின்சாரமில்லாத, கஜா புயலில் விழுந்த குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டு மன உறுதியோடு படித்து,நடந்து முடிந்த ப்ளஸ் டூ தேர்வில் 600 க்கு 524 மதிப்பெண் பெற்றுள்ளார்,தஞ்சாவூர் பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மாணவி சஹானா.
    #ஊக்கமது_கைவிடேல் என்று ஆசிரியர் செல்வம் ட்வீட் செய்து பாராட்டியிருந்தார்.

    படிப்பு

    மருத்துவம் படிக்க விரும்பும் சஹானாவுக்கு உதவி செய்யக்கோரி இயக்குநர் சரவணன் ட்வீட் செய்தார். சரவணன் ட்வீட் போட்டது வீண் போகவில்லை. சஹானாவுக்கு உதவி கிடைத்துவிட்டது.

    சிவகார்த்திகேயன்

    சரவணன் ட்வீட் போட்ட வேகத்தில் சஹானாவின் முழு படிப்பு செலவையும் ஏற்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அவருக்கு சரவணன் நன்றி தெரிவித்துள்ளார்.

    பாராட்டு

    ஒரு ஏழை மாணவியின் படிப்பு செலவை ஏற்ற சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுகள் வந்து குவிகின்றது. நீங்க நல்லா இருக்கணும் என்று பலரும் வாழ்த்துகிறார்கள்.

    English summary
    Sivakarthikeyan has come forward to help a poor girl Sahana to study medicine.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X