சூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயனை கட்டி பிடித்த நார்வே நாட்டு பெண்கள்!
சென்னை: நார்வே நாட்டில் நடந்த சூட்டிங்கை பார்க்க வந்த இளம் பெண்கள் தன்னை கட்டிப் பிடித்து வாழ்த்து தெரிவித்ததால் நெகிழ்ந்து போயுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி இளம் ஹீரோவாக உருவாகியுள்ளவர் சிவகார்த்திகேயன்.

கனவு கண்ணன்
இவரது நக்கல் கலந்த நகைச்சுவை, அப்பாவித்தனமான நடவடிக்கை மற்றும் பால்வடியும் (!) முக அமைப்பு போன்றவை இளம் பெண்களை ஈர்த்துள்ளன.

விஜய் டிவிக்கு வந்தவருக்கு முத்தம்
விஜய் டிவிக்கு நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த சிவகார்த்திகேயனை, இளம் பெண்கள் கட்டி பிடித்தும், முத்தம் கொடுத்தும் அன்பை வெளிப்படுத்திய காட்சி சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

நார்வேயில் படப்பிடிப்பு
இந்நிலையில் சிவகார்த்திகேயன் கடல் கடந்தும் ரசிகைகளை ஈர்த்துள்ளது நார்வே நாட்டு சம்பவத்தில் இருந்து உறுதியாகிறது. ஆர்.எஸ்.துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் உருவாகிவரும் 'தானா' திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்துக்கான பாடல் காட்சி ஒன்று நார்வேயில் சமீபத்தில் படமாக்கப்பட்டது.

டாடா, பாய், பாய்..
இந்த படப்பிடிப்பில் பிளீச்சிங் செய்த முடியோடு ஸ்டைலிஷாக சிவகார்த்திகேயன் காணப்பட்டார். அப்போது அங்கு சூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்த இளம் பெண்கள் சிவகார்த்திகேயனை பாராட்டியதோடு கட்டிப்பிடித்தும் வாழ்த்திவிட்டு சென்றனர். சூட்டிங் முடிந்து கிளம்பும்போதும் திரளான இளம்பெண்கள் டாடா காண்பித்து அவரை வழியனுப்பினர்.

ஸ்ரீ திவ்யா ஜோடி
இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன், வருத்தப்படாத வாலிபர் சங்க திரைப்பட நாயகி ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்கிறார். இருவருமே மீண்டும் இணையும் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











