பராசக்தி ஆடியோ லான்ச்சில் தலைவர் ரஜினி மோடுக்கு போன சிவகார்த்திகேயன்.. கூலியை நியாபகப்படுத்திட்டாரே
சென்னை: பராசக்தி திரைப்படம் இன்னும் நான்கு நாட்களில் ரிலீஸாகவுள்ளது. பெரிய எதிர்பார்ப்பை சந்தித்திருக்கும் படம் நிச்சயமாக பந்தயம் அடிக்கும் என்று உறுதியாக சொல்கிறார்கள் எஸ்கேவின் ரசிகர்கள். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாகத்தான் நேற்று வெளியான படத்தின் ட்ரெய்லரும் இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ஆடியோ லான்ச்சில் ரஜினி வாய்ஸில் ரவி மோகன் பற்றி சிவகார்த்திகேயன் பேசியது அப்ளாஸை அள்ளியது.
சுதா கொங்கரா சூரரைப் போற்று படத்துக்கு பிறகு பராசக்தி படத்தை இயக்கியிருக்கிறார். சூர்யா இதிலிருந்து வெளியேறிய பிறகு சிவகார்த்திகேயனை வைத்து படத்தை முடித்துவிட்டார். ஹீரோவாக எஸ்கே நடிக்க; முக்கியமான ரோலை அதர்வா ஏற்றிருக்கிறார். வில்லனாக ரவி மோகன் நடித்திருக்கிறார். முதன்முறையாக தன்னுடைய கரியரில் இன்னொரு ஹீரோவுக்கு வில்லனாக ரவி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவருமே இந்த கேரக்டரை ஏற்றதற்கு அவரை பாராட்டிவருகிறார்கள்.
சூப்பர் ட்ரெய்லர்: படத்துடைய ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. அதை பார்த்த அனைவருக்குமே படத்தின் மீது ஆயிரம் மடங்கு ஹைப் ஏறிவிட்டது. ஹிந்தி திணிப்புக்கு எதிரான காட்சிகள், அதுதொடர்பான கூர்மையான வசனங்கள் என அத்தனையும் டாப் கிளாஸில் இருக்கின்றன. இதுவரை மொத்தம் அந்த ட்ரெய்லரை 25 கோடி பேருக்கும் அதிகமானோர் யூடியூபில் பார்த்திருப்பதை வைத்தே தெரிந்துகொள்ளலாம் அதற்கான ரெஸ்பான்ஸ் மக்களிடம் எப்படி இருக்கிறது என்பதை.

ரவி மோகன் பற்றி சிவகார்த்திகேயன்: இந்நிலையில் பராசக்தி ஆடியோ லான்ச் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நேற்று முதல் ஸ்ட்ரீமாக ஆரம்பித்திருக்கிறது. விழாவில் ரவி மோகன் பற்றி சிவகார்த்திகேயன் பேசியது வைரலாகியிருக்கிறது. அவர் பேசுகையில், "ரவி மோகன் நடித்த எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தை காலேஜ் படிக்கும்போது நான் பார்த்தேன். அதில் அவர் அணிந்திருந்த டி ஷர்ட்டுக்கள், பூட் கட் பேண்ட்டுகள் எல்லாம் அப்போது பயங்கர ட்ரெண்டாக இருந்தன.
ரஜினி வாய்ஸில்: இந்தப் படத்தில் ரவி மோகன் வில்லனாக நடிக்க ஒத்துக்கொண்டார் என சுதா கொங்கரா மேடம் என்னிடம் சொன்ன போது நான் நம்பவே இல்லை. சந்தோஷப்பட வேண்டிய நான் ஷாக்காகி தலைவர் மோடுக்கு போய்விட்டேன். 'எது ஜெயம் ரவியா. வில்லனா. ஒத்துக்கிட்டாரா (இதை ரஜினி வாய்ஸில் பேசினார்) என கேட்டேன். அவர் செட்டுக்கு வரும்போது அவருக்கு சிறந்த அனுபவமாக இருக்க வேண்டும் என்று நானும், சுதாவும் முடிவு செய்தோம்.
என்ன டீட்டெயிலிங் வேண்டுமானாலும் செய்யுங்கள்: ரவிக்காக இந்த கேரக்டரில் இன்னும் டீட்டெயிலிங் செய்யப்போகிறேன் என இயக்குநர் சொன்னார். நானும் ஒத்துக்கொண்டேன். அவர் பயங்கர ஸ்வீட். அதற்கு அப்படியே எதிர்மாறாக படத்தில் நடித்திருக்கிறார். ஸ்டைலிஷான வில்லனை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். பவர்ஃபுல்லான ரோல். சண்டை காட்சிகளில்தான் நாங்கள் நிறைய நெருக்கமானோம். இதில் நவர் நடித்திருப்பதால் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்" என்றார்.


Click it and Unblock the Notifications











