ஓய் பொண்டாட்டி.. ஹேப்பி பர்த் டே.. மனைவிக்கு தனது ஸ்டைலில் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் மதராஸி. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு கொடுக்கவில்லை. இவர் மலைபோல் நம்பிக் கொண்டிருக்கும் படம் என்றால் அது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படமான பராசக்தி படம் தான். இப்படி இருக்கையில் தனது மனைவி ஆர்த்தி இன்று அதாவது நவம்பர் 13ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தனது ஸ்டைலில் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன், திறமையும், ஈடுபாடும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றியை அடைந்து விடலாம் என்பதற்கு சிவகார்த்திகேயனும் ஒரு எடுத்துக் காட்டு. காமெடி கதையம்சம் கொண்ட படங்கள், ஜனரஞ்சகமான கதைகள், குடும்பப்பாங்கான கதைகள், ஆக்ஷன் கதைகள் என தன்னை ஒவ்வொன்றாக எல்லா கதைகளுக்கும் பொருத்திக் கொள்ள கவனமாகவும் தெளிவாகவும் உழைத்துள்ளார் சிவகார்த்திகேயன். சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் முன்னரே தனது மாமன் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஆண்டு இந்த தம்பதியருக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது. ஏற்கனவே ஒரு பெண் குழந்தை, அதன் பின்னர் ஒரு ஆண் குழந்தை என இருந்த இந்த தம்பதியர் மூன்றாவதாக குழந்தை பெற்றுக் கொண்டார்கள். அவர்களின் மூன்றாவது குழந்தைக்கு பவன் என்று பெயர் சூட்டினார்கள். சிவகார்த்திகேயன் தனது திரைப்படத்தின் புரோமோசன் நிகழ்ச்சிகளுக்கு எப்போதும் தனது குடும்பத்துடனே கலந்து கொள்கிறார். அவர்களுக்கு எப்போதும் முதல் வரிசையிலோ அல்லது இரண்டாவது வரிசையிலோ இடம் எப்போதும் உள்ளது.
இந்நிலையில் இன்று அதாவது நவம்பர் 13ஆம் தேதி தனது காதல் மனைவி ஆர்த்தி சிவகார்த்திகேயன் பிறந்த நாளைக் கொண்டாடுவதால், அவருக்கு தனது ஸ்டைலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது, எனது அனைத்திற்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுடன் அவர் பகிர்ந்துள்ள இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படமும் பார்ப்பதற்கு செம அழகாக இருப்பதால் ரசிகர்கள் வாழ்த்துகளையும் லைக்குகளையும் வாரி வழங்கி வருகிறார்கள்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள பராசக்தி படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. படத்தை ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்யவுள்ளதால், சிவகார்த்திகேயனுக்கு படத்தின் ரிலீஸ் குறித்து எந்த தலைவலியும் இல்லை. இவரது நடிப்பில் கடைசியாக சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் அமரன். இப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. இப்படம் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











