‘பிரின்ஸ்’ படத்தில் மாஸ் காட்டப் போகும் சிவகார்த்திகேயன்: இது தரமான சூப்பர் அப்டேட் ஆச்சே!

சென்னை: 'டாக்டர்', 'டான்' படங்களின் வெற்றியால் சிவகார்த்திகேயன் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார்.

அடுத்தடுத்து, பிரின்ஸ், மாவீரன் உட்பட மேலும் சில படங்களில் அவர் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தில் இருந்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

டாக்டர், டான் கொடுத்த நம்பிக்கை

டாக்டர், டான் கொடுத்த நம்பிக்கை

மிகப் பெரிய வெற்றிக்காக காத்திருந்த சிவகார்த்திகேயனுக்கு, 'டாக்டர்', 'டான்' படங்கள் அமர்க்களமான கம்பேக் கொடுத்தன. பக்கா கமர்சியலாக வெளியான இந்த இரண்டு படங்களுமே, 100 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தன. இதனால், மீண்டும் பிஸியான சிவகார்த்திகேயன், அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

புதிய கூட்டணியில் சிவகார்த்திகேயன்

புதிய கூட்டணியில் சிவகார்த்திகேயன்

'பிரின்ஸ்', 'மாவீரன்', கமலின் ராஜ்கமல் தயாரிப்பில் ஒரு படம் என, தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அனைத்து படங்களுமே புதிய கூட்டணியில் உருவாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக பிரின்ஸ், மாவீரன் இந்த இரண்டு படங்களுமே தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகவுள்ளன. இதனால், இந்தப் படங்களுக்கு ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளன.

பிரின்ஸ் தீபாவளிக்கு ரிலீஸ்

பிரின்ஸ் தீபாவளிக்கு ரிலீஸ்

தெலுங்கில் 'ஜதி ரத்னலு' படம் மூலம் கவனம் ஈர்த்த அனுதீப், சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுடன் இசையமைப்பாளர் தமனும் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ளார். இதனால், இந்தப் படத்தின் பாடல்கள் மாஸ் காட்டும் என, ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 'பிரின்ஸ்' படத்தின் சூட்டிங், கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், படமும் தீபாவளிக்கு ரிலீஸாகிறது.

தெலுங்கில் டப்பிங்

தெலுங்கில் டப்பிங்

'பிரின்ஸ்' படத்தின் மூலமாக சிவகார்த்திகேயன் முதன்முறையாக தெலுங்கிலும் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா, முக்கியமான பாத்திரங்களில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்நிலையில், தமிழைப் போலவே, இந்தப் படத்தின் தெலுங்கு டப்பிங்கையும் சிவகார்த்திகேயனே பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்து மாவீரன் படமும் தெலுங்கில் வெளியாகும் என்பதால், சிவகார்த்திகேயன் தெலுங்கு மொழியில் டப்பிங் பேச இப்போதே பயிற்சி எடுக்கத் தொடங்கிவிட்டார் என, ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X