வெங்கட் பிரபுவுடன் இணையும் சிவகார்த்திகேயன்… புது கூட்டணி மாஸ் தான் போங்க!
சென்னை : வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் மிகப்பெரிய வசூலைப் பெற்றது. உலக அளவில் 100 கோடியை படம் தாண்டியதாக அறிவித்தனர்.
டாக்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப்பிறகு சிவகார்த்திகேயன் படு பிஸியாக மாறிவிட்டார். டான், சயின்ஸ் பிக்சன் திரைப்படமான அயலான் வெளியீட்டுக்கு தயாராகி உள்ள பலத்திரைப்படங்களை சிவகார்த்திகேயன் கையில் வைத்துக்கொண்டு பிஸியாக உள்ளார்.

வெங்கட் பிரபு
சென்னை28, சரோஜா, கோவா ,மங்காத்தா, பிரியாணி போன்ற வெற்றித் திரைப்படங்களை கொடுத்தவர் வெங்கட்பிரபு. இவர் சென்னை 28 பார்ட்டி 2 பிறகு எந்த திரைப்படத்தையும் வெளியிடவில்லை. இதையடுத்து, சிம்புவை வைத்து மாநாடு என்ற பிளாஸ் பஸ்டர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார் வெங்கட்பிரபு.

பிஸியாக
செம பாமில் இருக்கும் வெங்கட்பிரபு அடுத்தடுத்து இயக்க உள்ள திரைப்படம் குறித்து அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர், அசோக் செல்வனை வைத்து மன்மதலீலை என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணிவண்ணன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

டோலிவுட்டில்
மன்மதலீலை படம் முடிந்த பிறகு டோலிவுட்டில் களமிறங்கி ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் வெங்கட் பிரபு. அந்த படத்தை முடித்து விட்டு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும், இதற்காக இவர்கள் இருவரும் அட்வான்ஸ் பெற்றுவிட்டதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் உலாவருகின்றன.

எஸ்கே 20
சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். அந்த திரைப்படத்திற்கு எஸ்கே 20 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சோனி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











