டான் இயக்குநர் போட்ட ஸ்கெட்ச்.. சிக்குவாரா சிவகார்த்திகேயன்.. அப்போ அந்த 100 கோடி சம்பளம்?
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறாரா அல்லது குட் நைட் படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் நடிக்கப் போகிறாரா? என கேள்விகள் எழுந்து வந்த நிலையில், மீண்டும் டான் படத்தை இயக்கிய இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் தான் சிவகார்த்திகேயன் இணையப் போவதாக கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட் அப்டேட்கள் சில சிக்கலான விஷயங்களுடன் வெளியாகி உள்ளன.
மோகன்லால் கால்ஷீட் காரணமாக சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு இணையும் படம் தாமதமாக அவர், உடனடியாக குட் நைட் இயக்குநர் இயக்கத்தில் குயிக்காக ஒரு படத்தில் நடித்து முடிக்கலாம் என திட்டமிட்டு இருந்தார். ஆனால், தற்போது அதற்கு பெரிய ஆப்பை கோல்ட் மைன்ஸ் தயாரிப்பாளர் வைத்து விட்டதாக கூறுகின்றனர்.

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தான் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டும் என்கிற சூழல் உருவாகி இருப்பதாகவும், சிவகார்த்திகேயன் இந்த விஷயத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
20 கோடி கொடுத்த பைனான்ஸியர்: பேஷன் ஸ்டூடியோஸ் தான் சிவகார்த்திகேயனின் அயலான் படம் ரிலீஸ் ஆகாமல் கடனில் சிக்கியிருக்கும் போது 20 கோடி ரூபாய் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கே பைனான்ஸ் செய்தது கோல்ட மைன்ஸ் தானாம். 13 மாதங்களில் சிபி சக்கரவர்த்தி - சிவகார்த்திகேயன் படத்தை எடுத்து ரிலீஸ் செய்ய வேண்டும் என ஒப்பந்தம் செய்து தான் பணத்தை அவர் கொடுத்ததாகவும் சிபிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மோதல் ஏற்பட அந்த படத்தை வேண்டாம் என சிவகார்த்திகேயன் சொல்லி விட்டு மற்ற படங்களில் பிசியான நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் அந்த படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என பைனான்ஸியர் கிடுக்குப்பிடி போட்டுள்ளதாக கூறுகின்றனர்.
100 கோடி டாட்டா?: விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி 450 கோடி வசூல் ஈட்டிய வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்றும் அவருக்கு சம்பளமாக சுமார் 100 கோடி வரை கிடைக்கும் என்றும் கோலிவுட் பேசிக்கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த படத்தை முடித்து விட்டுத்தான் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு பக்கம் போக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்கின்றனர். மீண்டும் மோகன்லால் கால்ஷீட் பிரச்சனை வேறு ஏற்படும் என தெரிகிறது.
2 இயக்குநர்கள் நிலைமை: கோட் படத்தை முடித்து விட்டு விஜய் எச். வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்திலேயே நடித்து முடித்துவிட்டு அரசியல்வாதியாக களமிறங்கி போராட ஆரம்பித்து விட்டார். ஆனால், இன்னமும் அந்த படத்தை இயக்கிய இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்த படத்தை ஆரம்பிக்க முடியாமல் காத்துக் கிடக்கிறார். மேலும், தாமதம் ஆனால், இன்னும் ஒரு வருடம் வெங்கட் பிரபு காத்திருக்க வேண்டும் என்கின்றனர். அதே போல, குட் நைட் படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகரனும் வெயிட்டிங்கில் கிடப்பாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. ஒரு பக்கம் தனுஷ் பல இயக்குநர்களை வரிசையாக லைனில் நிற்க வைத்துள்ள நிலையில், சிவகார்த்திகேயனும் வரிசையாக இயக்குநர்களை வெயிட் பண்ண வைக்கப் போகிறாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. மதராஸி மற்றும் பராசக்தி படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்து விட்டால், மேலும், பலர் லைனில் காத்திருக்க ரெடியாகி விடுவார்கள்.


Click it and Unblock the Notifications











