Lungi Boys: சிவகார்த்திகேயனைச் சந்தித்த லுங்கி பாய்ஸ்.. விஜய் ரசிகர்கள் தான் காரணமா?
சென்னை: என்னதான் தேர்தல் சீசனாக இருந்தாலும் மொத்த இந்தியாவுக்கும் இது ஐபிஎல் சீசன். ஐபிஎல் சீசன் வந்துவிட்டாலே நண்பர்கள் கூட, ஐபிஎல் முடியும் வரை ஜென்ம விரோதிகள் போல மாறிவிடுவார்கள் என்று கூறும் அளவுக்கு ஐபிஎல் ஃபீவர் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக் கொண்டுவிடும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மூன்று அணிகளுக்குத்தான் எப்போதுமே மவுசு அதிகம். ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ். இரண்டு தி கிரேட் பல்தான்ஸான மும்பை இந்தியன்ஸ், மூன்றாவது லாயல்ட்டிக்கு பெயர் போன ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என இந்த மூன்று அணிகளுக்குத்தான். கடந்த சில சீசன்களாகவே தமிழ்நாட்டு ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது ஐபிஎல் தொடர்பான ட்ரோல் வீடியோக்கள் தான்.
அதில் பெருவாரியான ரசிகர்கள் மற்றும் இணையதள வாசிகளால் பெரும் கவனத்தை ஈர்த்த டீம் என்றால் அது லுங்கி பாய்ஸ் டீம் தான். இந்த ஆண்டு அவர்கள் கையில் எடுத்துள்ள கான்செப்ட் ஆன துரந்தர் பட பாணி கான்செப்ட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பைப் பெற்றுவிட்டது.

சென்னை, மும்பை, பெங்களூரு அணிகளின் போட்டி முடிந்ததுமே ரசிகர்கள் நேராக வருவது, இவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை நோக்கித்தான். காரணம் இவர்களின் நகைச்சுவையான ட்ரோல் வீடியோவுக்கு அவ்வளவு மவுசு. இப்படி இருக்கையில் லுங்கி பாய்ஸ் குழுவினர் நடிகர் சிவகார்த்திகேயனைச் சந்தித்துள்ளனர் இது தொடர்பாக அவர்களின் சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.
லுங்கி பாய்ஸ்: சிவகார்த்திகேயன் உடன் லுங்கி பாய்ஸ் டீம் இருப்பதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் நடிகர் சிவகார்த்திகேயன் டிரெண்டிங் லுங்கி பாய்ஸ் குழுவினருடன் உள்ளார் என்று பதிவிட்டு வருகிறார்கள். மேலும் பலர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் லுங்கி பாய்ஸ் குழுவினர் நடிக்கவுள்ளனர் என்று பேசி வருகிறார்கள்.

விஜய் ரசிகர்கள்: மேலும் சிலரோ கடந்த காலத்தை கணக்கில் வைத்து இந்த சந்திப்பை சம்மந்தப்படுத்தி வருகிறார்கள். அதாவது சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியானபோது படம் பார்த்துவிட்டு, படம் நன்றாக உள்ளது என்று லுங்கி பாய்ஸ் குழுவினர் வீடியோ ஒன்றைப் பதிவிட்டனர். அப்போது விஜய் ரசிகர்கள் பலரும், லுங்கி பாய்ஸ் குழுவினரை மிகவும் மோசமாக விமர்சித்தனர், திட்டினர்.
சிவகார்த்திகேயன்: இது தொடர்பாகவும் அவர்கள் விளக்க வீடியோவும் பதிவிட்டனர். அதில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் நன்றாக உள்ளது என்று சொல்லக் கூடாதா? ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆகி இருந்தால் அந்த படத்தையும் பார்த்துவிட்டு நாங்கள் படம் குறித்து பேசி இருப்போம் என்று பேசி இருந்தனர். பராசக்தி படம் நன்றாக இருக்கிறது என்று சொன்ன காரணத்திற்காக சில விஜய் ரசிகர்கள் லுங்கி பாய்ஸ் குழுவினரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் வாங்குவதில் இருந்து பின் வாங்கினர். சிவகார்த்திகேயன் படத்திற்கு ஆதரவாக லுங்கி பாய்ஸ் குழுவினர் இருந்ததால், சிவகார்த்திகேயன் இவர்களைச் சந்தித்திருக்கலாம் என்றும் பேச்சுக்கள் ஓடிக் கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications















