சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் டீசர் மட்டும் தானா படம் எப்போ?

சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! டீசர் மட்டும் தானா ? படம் எப்போ ?

சென்னை: சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் தயாராகி வரும் படம் தான் டாக்டர்.

இந்த படத்தை நெல்சன் இயக்க, அனிருத் இசையமைக்க, KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அடுத்த மாதம் நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்க காத்துள்ளது படக்குழு.

ரசிகர்களின் ஆதரவு

ரசிகர்களின் ஆதரவு

இயக்குனர் நெல்சன் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் நடித்திருந்தனர். தாயின் சிகிச்சைக்கு நாயகி போதை பொருள் கடத்துவது போன்ற கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. ரசிகர்களின் ஆதரவும் இந்த படத்திற்கு நன்றாகவே கிடைத்தது.

படப்பிடிப்பு முடிவு

படப்பிடிப்பு முடிவு

அதனுடைய வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் நடிகர் சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்திற்காக கைகோர்த்தார். கொரோனா தொற்றுக்கு முன்னரே ஷூட்டிங் கிட்ட தட்ட முடிவடைய மீதமுள்ள பணிகளை படக்குழு சமீபத்தில் முடித்தது என அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் இருந்தது.

அதிகமான ஆதரவு

அதிகமான ஆதரவு

இதற்கிடையில் தளபதி விஜயிடம் கதை சொல்லி #தளபதி65 படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளார் இயக்குனர் நெல்சன். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, அனிருத் இசையமைக்கிறார். இதனால் டாக்டர் படத்திற்கு தளபதி ரசிகர்கள் சார்பாக கூடுதலான வரவேற்பு கிடைத்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் அதாவது சிவகார்த்திகேயன் பிறந்தநாளான பிப்ரவரி 17-ம் தேதி டாக்டர் படத்தின் டீசர் வெளியாக இருக்கிறதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டாக்டர் படக்குழு விரைவில் அறிவிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X