SK: மும்பையில் சிவகார்த்திகேயன் கொண்டாடிய பார்ட்டி? காருக்குள் இருக்கும் பெண் யார்? தீயாக பரவும் வீடியோ

மும்பை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பாடகராகவும் பாடலாசிரியராகவும் தமிழ் திரை உலகில் கொடிகட்டி பறந்து வருகிறார். கடைசியாக அவரது தயாரிப்பில் உருவான தாய் கிழவி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டது. இப்படி இருக்கையில் இவர் தற்போது தாய்க்கிழவி படத்தின் இயக்குனரான சிவக்குமார் முருகேசன் உடன் இணைந்து சேயோன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் இடம்பெற்றுள்ள ஒரு வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதாவது சிவகார்த்திகேயன் மும்பையில் உள்ள பந்த்ராவில் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டார் என்றும் அதை முடித்துவிட்டு அவர் காரில் ஏறிச் செல்லும் போது காருக்குள் அவருடன் ஒரு பெண் இருந்தார் என்றும் வீடியோ ஒன்று பரவி வருகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் பலவிதமாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Sivakarthikeyan Mumbai Party Video Goes Viral Mystery Woman in Car Sparks Speculation

ஆனால் அந்த வீடியோவை தெளிவாக பார்த்தாலே தெரியும் சிவகார்த்திகேயன் உடன் அந்த பெண் அமைந்திருக்கவில்லை. சிவகார்த்திகேயனுக்கு பின் வரிசையில் தான் அவர் அமர்ந்திருக்கிறார். மேலும் அந்த பெண் நடிகர் சிவகார்த்திகேயனின் குழுவில் ஒரு நபராக இருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்‌. சிவகார்த்திகேயன் தற்போது சேயோன் படத்தில் நடித்து வருவதால் அந்தப் படத்தின் லுக் டெஸ்டிற்காகவோ அல்லது வேறு ஏதாவது ஒன்றிற்காகவே மும்பை சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பாராட்டு: சேயோன் படத்தின் இயக்குநர் தாய் கிழவி படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல் சில காட்சிகளை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்கள் பலரும் இயக்குநரைப் பாராட்டி வருகிறார்கள்.

பராசக்தி: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பராசக்தி. டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சுதா கொங்கார இயக்கத்தில் உருவாகி வெளியாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபீசில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது என்று படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. இது சிவகார்த்திகேயனின் 25ஆவது படமும் கூட. இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். இவரது இசையில் உருவான 100ஆவது படம் இது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X