Sivakarthikeyan NetWorth: 2K கிட்ஸ் சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் இன்று தனது 39வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். சின்ன திரை மூலம் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன், கடந்த 13 ஆண்டுகளில் மாஸ் ஹீரோவாக உச்சம் தொட்டுள்ளார். 22 படங்களில் மட்டுமே நடித்துள்ள சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு பற்றி இப்போது பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினி, கேப்டன் விஜயகாந்த், அல்டிமேட் ஸ்டார் அஜித் ஆகியோர் வரிசையில் எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் ஹீரோவானவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அடையாளம் காணப்பட்ட சிவா, சின்ன திரையிலேயே பல அவதாரங்களை எடுத்தார். அங்கிருந்து சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் அடுத்தடுத்து அசுரத்தனமாக வளர்ந்து நிற்கிறார்.

 Sivakarthikeyan Net Worth 2024: Sivakarthikeyan Net Worth is reported to be 150 crores in 2024

காமெடியனாகவும் செகண்ட் ஹீரோவாகவும் நடித்து வந்த சிவகார்த்திகேயன், இப்போது டாப் 5 ஹீரோக்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவாவின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சர்வ சாதாரணமாக 100 கோடி ரூபாய் வசூல் செய்கின்றன. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன், அயலான் இரண்டு படங்களும் 100 கோடி வசூலை நெருங்கின. இதனைத் தொடர்ந்து தற்போது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் அமரன் படத்தில் நடித்துள்ளார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள அமரன் படத்தின் டைட்டில் டீசர், நேற்று மாலை வெளியானது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான அமரன் டைட்டில் டீசர், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக தனது 23வது படத்தில் இயக்குநர் ஏஆர் முருகதாஸுடன் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

2012ம் ஆண்டு வெளியான மெரினா படத்திற்காக பத்தாயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கிய சிவகார்த்திகேயன், இன்று கோடிகளில் வாங்கி வருகிறார். அதன்படி ஒரு படத்திற்காக 35 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு 50 முதல் 60 கோடி ரூபாய் சம்பாதிக்கும் சிவகார்த்திகேயன், விளம்பரங்கள் உட்பட மற்ற நிகழ்ச்சிகள் மூலமும் கோடிகளை குவித்து வருகிறாராம்.

ஹீரோவாக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். சென்னை வளசரவாக்கத்தில் சொந்த வீட்டில் வசித்து வரும் சிவகார்த்திகேயன், ஈசிஆர் சாலையில் பல கோடிகள் மதிப்பில் கெஸ்ட் ஹவுஸ் ஒன்றை வாங்கிப் போட்டுள்ளாராம். அதேபோல் தனது சொந்த ஊரான திருவீழிமிழலையிலும் பிரம்மாண்டமாக வீடு கட்டியுள்ளார். மேலும் ஆடி, BMW, மினி கூப்பர் போன்ற சொகுசு கார்களும் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமாக உள்ளன. இதனடிப்படையில் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு மொத்தம் 150 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X