விஷால் பட இயக்குனருடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்
சென்னை: சிவகார்த்திகேயனின் 15வது பட ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளது.
ஒரு மூங்கில் மரத்தின் வளர்ச்சி போல தமிழ் சினிமாவில் கிடு கிடுவென நேராக வளர்ந்துகொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். நாளுக்கு நாள் மூங்கிலின் வளர்ச்சியை நாம் குறித்து வைத்து அளவிட முடியும். அதுபோலத்தான் இருக்கிறது சிவாவின் அடுத்த கட்ட நகர்வுகள்.

சீமராஜா திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், தற்போது இரண்டு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் ஒரு படமும், ஆர்டி.ராஜா தயாரிப்பில், ரவிக்குமார் இயக்கும் சயின்ஸ் பிக்ஷன் த்ரில்லர் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் ரகுல்ப்ரீத் சிங் சிவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
அடுத்ததாக இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்க உள்ள படத்திலும் நடிக்க உள்ளார். இரும்புத்திரை திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பாகவே சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லி, ஓகே வாங்கிவிட்டாராம் மித்ரன்.
சிவகார்த்திகேயனுடன் குறும்படங்கள் செய்த காலத்திலேயே இந்த கதையை சிவாவுக்காக தயார் செய்துள்ளார் மித்ரன். இது ஒரு பரபரப்புக்கு பஞ்சமில்லாத த்ரில்லர் படமாக இருக்கும் என மித்ரன் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருந்ததுதான் தள்ளிப்போனதற்கான காரணம் என சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. இத்திரைப்படத்தையும் 24 ஏஎம் ஸ்டுடியோ ஆர்டி.ராஜாவே தயாரிக்கிறார். மற்ற நடிகர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











