சிவகார்த்திகேயனை எல்லாம் நம்ப முடியாது.. சிம்பு பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அப்படி சொன்னாரா?

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான பராசக்தி திரைப்படம் தோல்வியடைந்தாலும்; எஸ்கேவின் மார்க்கெட்டும், சம்பளமும் இன்னமும் அப்படியேத்தான் இருப்பதாக திரைத்துறையினர் கூறுகிறார்கள். அடுத்ததாக சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இதற்கிடையே வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஒரு படத்தில் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.

சிவகார்த்திகேயன் சினிமாவுக்குள் வந்தபோது இவரெல்லாம் பத்து படங்கள் கூட தாக்குப்பிடிக்க மாட்டார் என்றுதான் ஒருதரப்பினர் ஆரூடம் கூறினார்கள். ஆனால் அவரோ 25 படங்களில் நடித்து முடித்துவிட்டு; கோலிவுட்டின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக மாறி; தன்னை விமர்சித்தவர்களை, விமர்சிப்பவர்களை பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறார். அவரது சம்பளமும் ஐம்பது கோடி ரூபாய் வரை உயர்ந்துவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. அதற்கு அமரன் படத்தின் வெற்றிதான் மிக முக்கியமான காரணமாகும்.

Sivakarthikeyan Next Movie Venkat Prabhu Film Dropped Buzz on Ashwath Marimuthu
Photo Credit:

பராசக்தி தோல்வி: கடைசியாக அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்தார். ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டம்தான் படத்தின் ஒன்லைன். அதன் காரணமாக படம் கண்டிப்பாக மறக்க முடியாத அனுபவத்தை தரும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அந்த திரைக்கதைக்குள் சுதா கொங்கரா என்னென்னமோ செய்து வைக்க படம் தோல்வியடைந்தது. நல்ல கதைக்களத்தை இயக்குநர் தனது மேக்கிங்கால் சொதப்பிவிட்டார் என்றார்கள் ரசிகர்கள். ஆனால் படம் நூறு கோடி ரூபாய்வரை வசூலிதத்தாக அறிவிக்கப்பட்டது.

அடுத்த படம்: அடுத்ததாக அவர் தாய் கிழவி இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். தாய் கிழவி படத்தின் கதையை எஸ்கே தயாரிப்பதற்காக சிவக்குமார் சொன்னபோதே அவர் இயக்கத்தில் நடிப்பதற்கு முடிவெடுத்துவிட்டார் சிவா. கண்டிப்பாக சேயோன் தனது கரியரில் பெரிய இடத்தை பெறும் என்ற நம்பிக்கையிலும் இருக்கிறார். குறிப்பாக படம் ரூரல் சப்ஜெக்ட் என்பதால் விக்ரமுக்கு எப்படி தில், தூள் எல்லாம் அமைந்ததோ அதேபோல் எஸ்கேவுக்கும் சேயோன் அமையும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை.

Also Read
லெஜெண்ட் சரவணனின் லீடர் எப்படி இருக்கு தெரியுமா?.. எக்ஸ் விமர்சனம் இதோ.. சூப்பரா இருக்காம் பாஸ்
லெஜெண்ட் சரவணனின் லீடர் எப்படி இருக்கு தெரியுமா?.. எக்ஸ் விமர்சனம் இதோ.. சூப்பரா இருக்காம் பாஸ்

வெங்கட் பிரபுவுடன் படம் ட்ராப்?: இதற்கிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதாகவும் இருந்தது. வெங்கட் - சிவா கூட்டணியில் சைன்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் பிரமாண்ட பட்ஜெட்டில் ஒரு படத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டதாக சில நாட்களாக தகவல்கள் வருகின்றன. சிவாவால் சேயோன் படத்தை விட்டு வர முடியாததால் இந்த முடிவு நிகழ்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

என்ன தகவல்?: அதாவது ஓ மை கடவுளே, டிராகன் படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக சிம்புவை வைத்து ஒரு படம் இயக்குகிறார். ஆனால் எஸ்டிஆர் அரசன் படத்தில் கமிட்டாகிவிட்டார். அதை முடித்த பிறகுதான் அஸ்வத் படத்தில் நடிக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் தனக்கு ஏதேனும் கதை இருந்தால் சொல்லும்படி எஸ்கே; அஸ்வத்திடம் கூறியதாகவும்; அதற்கு அவர் நோ சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி, சிவகார்த்திகேயனை நம்ப முடியாது. அவரை நம்பி சென்றால் வெங்கட் பிரபு, சிபி சக்கரவர்த்தி உள்ளிட்டோரை எப்படி கழற்றிவிட்டாரோ அதேபோல் தன்னையும் செய்துவிடுவார் என்று நெருக்கமானவர்களிடம் புலம்பியதாக வலைப்பேச்சு டீம் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X