சினிமாவில் 14 வருடங்கள் நிறைவு.. சிவகார்த்திகேயன் குடும்பத்தோடு அடித்த விசிட்.. பக்குவமா பேசுறாரு

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதத்தில் பராசக்தி திரைப்படம் வெளியானது. பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகி சுமாரான வரவேற்பையே பெற்றது. அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கமிட்டாகியிருக்கும் அவர்; தாய் கிழவி படத்தின் இயக்குநர் இயக்கத்திலும் நடிக்கிறாராம். இந்நிலையில் திரைத்துறைக்கு வந்து 14 வருடங்கள் நிறைவாகிவிட்டது. அதனையொட்டி செய்தியாளர்களை சந்தித்த சிவா பல விஷயங்களை பேசினார்.

மாவீரன், அயலான், அமரன் என வரிசையாக ஹிட் படங்களை பார்த்த சிவகார்த்திகேயன்; சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்தார். சூர்யாவைத்து சுதா இயக்கிய சூரரைப் போற்று படம் மாதிரியே இந்த பராசக்தியும் ரிசல்ட்டை பெறும் என்று நம்பினார் எஸ்கே. அவருடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா என பலரும் நடித்திருந்தார்கள். ஹைப்பை எக்கச்சக்கமாக பற்ற வைத்து கடைசியில் புஸ்வானமாகி போனது படம். விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூலில் நூறு கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.

அடுத்த படம்: பராசக்தி பெற்ற சுமார் வரவேற்பு கண்டிப்பாக எஸ்கேவுக்கு கொஞ்சம் அப்செட்டைத்தான் கொடுத்திருக்கும். அதேசமயம் தனது நடிப்புக்கு நல்லவிதமான ரெஸ்பான்ஸ் கிடைத்ததால் கொஞ்சம் நிம்மதியடைந்திருக்கிறார். அடுத்ததாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். சில வருடங்களுக்கு முன்பே இந்தக் கூட்டணி அமைந்துவிட்டது. ஆனால் கோட் பட வேலைகளால் அதில் பிஸியானார் வெங்கட். அந்த கேப்பில் பராசக்தியில் பிஸியானார் எஸ்கே.

Sivakarthikeyan on 14 Years in Cinema Opens Up About Next Films
Photo Credit:

இடையில் ஒரு படம்: இப்போதும் இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் முடிந்தபாடில்லை என்றே தெரிகிறது. இது சைன்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில் நடக்கும் படம் என கூறப்படுகிறது. எனவே வேலைகள் இழுத்துக்கொண்டே செல்கிறதாம். ஷூட்டிங் தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் தாய் கிழவி படத்தை இயக்கியிருக்கும் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட சிவா பிளான் செய்திருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது.

14 வருடங்கள் நிறைவு: சூழல் இப்படி இருக்க சினிமாவுக்கு சிவகார்த்திகேயன் வந்து இந்த வருடத்தோடு 14 வருடங்கள் நிறைவாகின்றன. அதனையொட்டி அனைவருமே அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகிறார். அவர் தனது மனைவி ஆர்த்தி மற்றும் மகள், மகன்களுடன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்களுடன் மகிழ்ச்சியாக செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். அந்த வீடியோக்கள் எல்லாம் ட்ரெண்டாகின.

செய்தியாளர்கள் சந்திப்பு: சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சினிமாவில் நான் 14 வருடங்களை நிறைவு செய்திருக்கிறேன். நிறைய அனுபவங்களை அது எனக்கு கொடுத்திருக்கிறது. மக்கள் கொடுக்கும் அன்பால் மட்டும்தான் இதெல்லாம் நடக்கிறது. அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் படங்களில் நடிப்பேன். அடுத்த படத்துக்கான கதை, இயக்குநர் எல்லாத்தையும் லாக் செய்துவிட்டோம். விரைவில் அறிவிப்பு வரும். ஜனநாயகன் படமும் சீக்கிரமே வந்துவிடும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X