Sivakarthikeyan: ஜெயம் ரவியுடன் சண்டை போட நான் ரெடி.. சிவகார்த்திகேயன் ஓபன் ஸ்டேட்மெண்ட்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகின்றார். இந்த இரண்டு படங்களுக்கு முன் இவர் நடிப்பில் உருவாகியுள்ள இவரது 23வது படம் வரும் கோடை காலத்தில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகின்றது. தீபாவளிக்கு ரிலீஸ் ஆன அமரன் படம் சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவில் உச்சத்திற்கு கொண்டு சென்று விட்டதால், தற்போது சிவகார்த்திகேயன், பிக் பட்ஜெட் நடிகராக மாறிவிட்டார். தற்போது இவர் நடித்து வரும் இரண்டு படங்களில் ஒரு படம் இவரது 25வது படம். இந்தப் படத்தினை சுதா கொங்கரா இயக்குகின்றார். இந்தப் படம் குறித்து சிவகார்த்திகேயன் சமீபத்தில் பேசியுள்ளது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கி, சூர்யா நடிக்க ஒப்பந்தமான படம் புறநானூறு. இந்தப் படத்தில் இருந்து சூர்யா விலகிய பின்னர், இந்தப் படத்தில் கமிட் ஆனவர்தான், சிவகார்த்திகேயன். மேலும், தற்போது உலாவரும் தகவலின்படி, இந்தப் படத்திற்கு 1965 என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உலாவுகின்றது. ஆனால் இது இது தொடர்பாக படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

இந்தப் படத்திற்கு இசை அமைக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு இசையில் 100வது படமாக அமைந்துள்ளது. படத்தில் சிவகார்த்திகேயனுடன், ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றார்கள். படத்தின் பூஜை அண்மையில் சென்னையில் நடைபெற்றது.
ஜெயம் ரவி: இந்நிலையில் படம் குறித்து சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது, “ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நான் நடிக்கும் எனது 25வது படத்தின் புரோமோ ஷூட் அண்மையில்தான் முடிந்தது. ஜெயம் ரவி சார் எனக்குச் சீனியர். அவருடைய பல படங்கள் என்னுடைய கல்லூரி காலங்களில் பார்த்துள்ளேன். அவரை இந்தப் படத்தின் வில்லன் என்று சொல்லுவதைவிடவும், எதிர்மறை கதாபாத்திரம் என்று சொல்லுவதுதான் சரியாக இருக்கும். அவருடன் படத்தில் சண்டைபோட ஆவலாக காத்துக் கொண்டு உள்ளேன்.

புகைபிடிப்பது: என்னுடைய படங்களை குழந்தைகளும் அதிக அளவில் பார்க்கின்றார்கள் என்பதால், நான் எனது படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வருகின்றேன். எனக்கும் அதில் விருப்பம் இல்லை. அதேநேரத்தில், எனது இயக்குநர்களிடம் நான் புகைபிடிப்பது போன்ற காட்சிகளை வைக்காதீர்கள் என யாருக்கும் நான் கட்டுப்பாடு போடுவதில்லை. மேலும், புகைப்பிடிப்பதை ஊக்குவிக்கும் காட்சிகளை எக்காரணம் கொண்டும் வைக்க வேண்டாம் என தெளிவாகச் சொல்லிவிடுவேன். ஒரு கதாபாத்திரத்திற்கு புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் அவசியமென்றால் அதனைச் செய்ய, ஒரு நடிகராக தயாராகத்தான் உள்ளேன்” என கூறியுள்ளார்.
கவனம்: சிவகார்த்திகேயன் இவ்வாறு கூறியுள்ளது, பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. குறிப்பாக புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க சிவகார்த்திகேயன் தயார் எனக் கூறியுள்ளது, அவரை மாஸ் கதாநாயகனாக திரையில் காட்ட தேவைப்படுகின்றது என யோசிக்கும் இயக்குநர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











