தாய் கிழவி இயக்குநரின் சேயோன்.. சூப்பர் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்.. சம்பவம் ஸ்டார்ட் ஆகப்போகுது

சென்னை: சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ஜொலித்துவருகிறார். அவர் தயாரித்த கனா, கொட்டுக்காளி உள்ளிட்ட படங்கள் எல்லாம் நல்ல பெயரை பெற்றிருக்கின்றன. அவர் இப்போது ராதிகாவை வைத்து தாய் கிழவி படத்தை தயாரித்திருக்கிறார். படம் ரிலீஸாகி பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இயக்குநர் மீது அதீத நம்பிக்கை வைத்ததன் காரணமாக தாய் கிழவி ரிலீஸுக்கு முன்னரே அவர் இயக்கத்தில் நடிக்க சேயோன் படத்தில் கமிட்டாகிவிட்டார்.

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் நம்பிக்கை தரும் விதத்தில் இருக்கிறது. திறமையும், உழைப்பும், பொறுமையும் இருந்தால் கண்டிப்பாக நாமும் சிவா மாதிரி வளரலாம் என்ற எண்ணத்தை பலருக்கும் உண்டு செய்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். நடிகராகவே அவர் பத்து படங்கள் தாண்டமாட்டார் என்று பலரும் ஆரூடம் கூறினார்கள். ஆனால் அதையெல்லாம் அடித்து உடைத்து 25 படங்கள் நடித்துவிட்டார். நடிப்பதோடு மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் தரமான படங்களை கொடுத்துவருகிறார்.

Sivakarthikeyan Opens Up About Thaai Kizhavi Success Seyon Shooting Starts in April
Photo Credit:

அடுத்த படம்: சிவாவின் லைன் அப்பை பொறுத்தவரை அடுத்ததாக வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தார். சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. அது சைன்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில் உருவாவதால் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளுக்கு சில காலம் எடுக்கும் என்பதால் அந்த கேப்பில் இன்னொரு படத்தில் நடித்துவிடலாம் என பிளான் செய்தார். யார் அந்தப் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்ப்பு இருந்த சூழலில் சர்ப்ரைஸ் தரும் விதத்தில் வந்தது அறிவிப்பு.

சேயோன் அறிவிப்பு: அதாவது தனது தயாரிப்பில் தாய் கிழவி படத்தை இயக்கிய சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். கமல்ஹாசன் படத்தை தயாரிக்க; சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தாய் கிழவி ரிலீஸுக்கு முன்னரே இப்படத்தில் கமிட்டாகிவிட்டார். சமீபத்தில் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பக்கா ரூரல் படமாக இது உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read
விஜய் அரசியலுக்கு வந்தது சங்கீதாவுக்கு பிடிக்கவில்லையா?.. அதனால்தான் டார்கெட்டா?.. தவெக முக்கிய தலைகட்டு ஓபன்
விஜய் அரசியலுக்கு வந்தது சங்கீதாவுக்கு பிடிக்கவில்லையா?.. அதனால்தான் டார்கெட்டா?.. தவெக முக்கிய தலைகட்டு ஓபன்

தாய் கிழவி சூப்பர் ரெஸ்பான்ஸ்: இதற்கிடையே எஸ்கே தயாரித்திருக்கும் தாய் கிழவி படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. இப்படத்தின் வெற்றி கண்டிப்பாக இதேபோன்று இன்னும் நிறைய படங்களை தயாரிப்பதற்கான நம்பிக்கையையும், உற்சாகத்தையும் எஸ்கேவுக்கு கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். அதுமட்டுமின்றி சிவக்குமார் மீதும் ரசிகர்களுக்கு பெரிய நம்பிக்கை உருவாகிவிட்டது. இவர் வருங்காலத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக இருப்பார் எனவும் ஆரூடம் கூறுகிறார்கள்.

சிவகார்த்திகேயன் பேட்டி: இந்நிலையில் திருநள்ளாறு கோயிலுகு சென்ற சிவகார்த்திகேயன்; சாமி தரிசனத்தை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தாய் கிழவி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை மக்கள் எங்களுக்கு கொடுத்துள்ளார்கள். இந்தப் படம் உங்கள் பாட்டியை நினைவுப்படுத்தும். அம்மாவை நினைவுப்படுத்தும். கமல் சார் தயாரிப்பில் நான் அடுத்து நடிக்கும் அடுத்த படம் சேயோன். அதன் ஷூட்டிங் ஏப்ரலில் ஸ்டார்ட் ஆகிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X