பராசக்தி இசை வெளியீட்டு விழா.. விஜய்க்கு டஃப் கொடுக்கும் சிவகார்த்திகேயன்.. இந்த ஊர்லாம் லிஸ்ட்ல இருக்கு

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் பராசக்தி திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. வரிசையாக ஹிட் மேல் ஹிட் கொடுத்துவரும் எஸ்கே இந்தப் படத்திலும் அதை தொடர்வார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

அமரன் படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை எங்கேயோ கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது. அந்தப் படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்வரை வசூலித்தது. அதில் அவரது நடிப்பும் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்திருப்பதாகவும்; இனி அவரது வளர்ச்சி இன்னும் வேகமாக இருக்கும் என்றும் திரைத்துறையில் ஒருதரப்பினர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அமரன் படத்துக்கு முன்னதாக அவர் நடித்த படங்களும் ஹிட்டாகியிருந்தன.

தொடர்ச்சியான ஹிட்டுகள்: அதாவது அமரனுக்கு முன்னதாக அவர் நடித்திருந்த அயலான், மாவீரன் ஆகிய இரண்டு படங்களும் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கியிருந்தன. அதுவும் தனுஷ் நடித்திருந்த கேப்டன் மில்லர் படம் அயலான் படத்துக்கு போட்டியாக களமிறங்கியிருந்தது. ஆனால் சிவகார்த்திகேயன் அசால்ட்டாக பந்தயம் அடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி வரிசையாக ஹிட்டுகள் கொடுத்துவருவதால் அவரை பிடிக்காதவர்கள் அவர் மீது சில வன்மங்களையும் கக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

Sivakarthikeyan Parasakthi Audio Launch Likely on January 4 in Madurai or Trichy
Photo Credit:

சுதா கொங்கராவுடன் பராசக்தி: அமரன் படத்தை முடித்துவிட்டு சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார் எஸ்கே. இதில் அவருடன் அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ரவி மோகன் இதில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில் முதலில் சூர்யாதான் நடிப்பதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேற; சிவகார்த்திகேயன் உள்ளே வந்தார்.

பெரிய எதிர்பார்ப்பு: சுதா கொங்கரா தேசிய விருது வென்ற இயக்குநர் ஆவார். அதுமட்டுமின்றி இப்படம் ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நடந்த மாணவர் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இப்படத்தின் மீது அதீத ஹைப் எகிறியிருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் ரத்னமாலா என்ற மெலோடி பாடல் வெளியாகி சூப்பர் வரவேற்பை பெற்றிருந்தது. படமானது அடுத்த வருடம் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.

இசை வெளியீட்டு விழா: படத்தின் இறுதிக்கட்ட பணிகள் இப்போது மும்முரமாக நடந்துவரும் நிலையில் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது ஜனவரி 4ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த முறை சென்னையில் இதனை நடத்தாமல் மதுரை அல்லது எஸ்கேவின் சொந்த ஊரான திருச்சியில் நடத்தவும் ஒரு பிளான் இருப்பதாக திரைத்துறையில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.

விஜய் ரூட்டில் சிவகார்த்திகேயன்?: இதனை கேள்விப்பட்ட ரசிகர்களோ, என்னது இது விஜய் ஃபார்முலாவில் வேறு ஒரு ஊரில் ஆடியோ வெளியீட்டு விழாவை எஸ்கே நடத்துகிறார். போகிற போக்கை பார்த்தால் விஜய்க்கே டஃப் கொடுத்து சின்ன தளபதி சிவகார்த்திகேயன் என்று சொல்வதை அவரே நிஜமாக்கிவிடுவாரோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். அதுமட்டுமின்றி சென்னைக்கு வெளியே இசை வெளியீட்டு விழாவை நடத்தி தனக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை திரைத்துறைக்கு காட்டுவதற்காகவும் அவர் இப்படி ஒரு மூவை செய்யலாம் என்றும் திரைத்துறையில் குரல்கள் கேட்கின்றன. முன்னதாக விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவில் நடக்கவிருப்பது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X