தலைவர் 173 இயக்குநரை சிவகார்த்திகேயன் இப்படி கலாய்க்கிறாரே.. பவுன்சர் வேலையெல்லாம் பார்க்குறாரு
சென்னை: ரஜினிகாந்த்தை வைத்து சிபி சக்கரவர்த்தி தலைவர் 173 படத்தை இயக்கவிருக்கிறார். இதனை கமல்ஹாசன் தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. டான் என்ற ஒரு படத்தை மட்டும் இயக்கியிருக்கும் சிபியை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பு சென்றிருக்கிறது. இதனை அவர் சரியாக கையாள வேண்டும். இல்லையென்றால் சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தாய் கிழவி பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அவரை சிவகார்த்திகேயன் கலாய்த்து தள்ளிவிட்டார்.
ரஜினிகாந்த்தை வைத்து கமல்ஹாசன் தயாரிக்கவிருந்த தலைவர் 173 படத்தை முதலில் சுந்தர்.சி இயக்குவதாக இருந்தார். ஏற்கனவே ரஜினியை வைத்து அவர் அருணாச்சலம் படத்தை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். எனவே இதனையும் முழு கமர்ஷியல் படமாக கொடுத்து பந்தயம் அடிப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரென இந்தப் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அது அனைவருக்குமே அதிர்ச்சியை உண்டு செய்தது.
உள்ளே வந்த சிபி சக்கரவர்த்தி: சுந்தர்.சி வெளியேறியதை அடுத்து யார் இந்தப் படத்தை இயக்குவார் என்ற கேள்வியில்; பல இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்டன. இறுதியாக டான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியை இயக்குநராக டிக் செய்தார்கள் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும். அந்த அறிவிப்பு வந்த பிறகு; ஒரே ஒரு படத்தை இயக்கியவருக்கு இவ்வளு பெரிய வாய்ப்பா என்று ஒட்டுமொத்த திரையுலகமும் ஆச்சரியத்தில் வாயடைத்து போனது என்பதுதான் உண்மை.

உறுதி கொடுத்த சிபி: அவர் ஒரு படத்தை மட்டும் இயக்கியிருந்தாலும் அந்தப் படம் நூறு கோடி ரூபாயை அள்ளியது. மேலும் அதில் காமெடி, எமோஷன் எல்லாம் பக்காவாக ஒர்க் அவுட்டாகி ஜனரஞ்சகமாக இருந்தது. எனவே தலைவர் 173 படத்தையும் அதே ஃப்ளேவரி கொடுத்து ஹிட்டடிப்பார் என்ற நம்பிக்கையும் ரசிகர்களுக்கு இருக்கிறது. வித் லவ் பட விழாவில் பேசியிருந்த சிபி, 'நிச்சயம் இப்படத்தை அனைவருக்கும் பிடிக்கும் படமாக கொடுப்பேன். இது சத்தியம்' என உறுதியும் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் டான் பட ஹிட் சமயத்தில் ரஜினியை சந்தித்து சொன்ன ஒன் லைனைத்தான் இப்போது டெவலப் செய்திருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்தில் தொடங்குகிறது.
தாய் கிழவி ட்ரெய்லர் வெளியீட்டு விழா: தலைவர் 173 பட அறிவிப்புக்கு பிறகு சிபி சக்கரவர்த்தியை எல்லோரும் உயர்வாகவே பார்க்கிறார்கள். சூழல் இப்படி இருக்க ராதிகாவை வைத்து சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் தாய் கிழவி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் சரத்குமார், சிபி சக்கரவர்த்தி, சூரி, இரா.சரவணன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். அப்போது சிபியை; சிவாகார்த்திகேயன் முரட்டுத்தனமாக கலாய்த்துவிட்டார்.
என்ன நடந்தது?: அதாவது அந்த விழா முடிந்து சிபி சக்கரவர்த்தி கிளம்பியபோது ஓடி வந்த சிவகார்த்திகேயன்; ஒரு பவுன்சர் எப்படி அழைத்து செல்வாரோ அதேபோல் அரங்கத்திலிருந்து வெளியே அழைத்து சென்றார். மேலும் அருகே இருந்தவர்களிடம் 'சிபி சாரின் வண்டி எங்கே?.. ஹெலிகாப்டாரா?' என கேட்க; சிபி சக்கரவர்த்தி வெட்கத்தில் செய்வதறியாது நடந்து வந்தார். இந்த வீடியோ அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறது.
அதேபோல் மேடையில் எஸ்கே பேசியபோது, "சிபி இந்த விழாவுக்கு வந்ததற்கு நன்றி. நீங்கள் தலைவர் பட இயக்குநர். இந்த நிகழ்ச்சிக்கு வந்து இவ்வளவு நேரம் சிறப்பித்து கொடுத்ததற்கும் நன்றி. நாம் இரண்டு பேரும் சேர்ந்து சுதனுடன் படம்ச் எய்வதாக இருந்தது. ஆனால் நீ மட்டும் எஸ்கேப் ஆகிட்ட. நீ போய் தலைவர் பக்கத்தில் உட்கார்ந்துட்ட. நான் மட்டும் மாட்டிக்கிட்டேன். திருப்பி நீ வந்துதான் ஆக வேண்டும். அக்ரீமெண்ட் போட்டிருக்கோம்" என பேசினார்.


Click it and Unblock the Notifications















