வேட்டி சட்டையில்.. கையில் கரும்புடன் சிவகார்த்திகேயன் கொண்டாடிய சூப்பர் பொங்கல்!

சென்னை : கோலமாவு கோகிலா திரைப்படத்தில் வரும் கல்யாண வயசு பாடலுக்கு பிறகு செல்லம்மா செல்லம்மா பாடல்களையும் எழுதி தன்னை சிறந்த பாடலாசிரியராகவும் நிரூபித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

கைவசம் இப்பொழுது அயலான் மற்றும் டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் இருக்கின்ற நிலையில் தனது அடுத்த திரைப்படத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனர் தேசிங் பெரியசாமி உடன் இணைவார் என தெரிகிறது.

பொங்கலை முன்னிட்டு வீட்டில் கையில் கரும்புடன் பொங்கலை கிண்டியவாறு பிரமாதமாக சிவகார்த்திகேயன் கொண்டாடிய பொங்கல் ஸ்பெஷல் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வயது வித்தியாசம் பார்க்காமல்

வயது வித்தியாசம் பார்க்காமல்

தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி பலவருட போராட்டங்களுக்கு பிறகு இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் சிவகார்த்திகேயனை கொண்டாடாத ரசிகர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு வயது வித்தியாசம் பார்க்காமல் சிவகார்த்திகேயனுக்கு பல கோடி ரசிகர்கள் இன்றும் இருக்கின்றனர்.

சமூக அக்கறைகொண்ட

சமூக அக்கறைகொண்ட

ஆரம்பத்தில் தொடர்ந்து கலகலப்பான காமெடி திரைப்படங்கள் நடித்து பக்கா ஃபேமிலி என்டர்டய்னராக இருந்த சிவகார்த்திகேயன் சமீபகாலமாக சமூக அக்கறைகொண்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அவ்வகையில் வேலைக்காரன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கோலமாவு கோகிலா இயக்குனர்களின் டாக்டர் திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு விஷயங்களை கையில் எடுத்திருக்கிறார்.

இணைய உள்ளதாக

இணைய உள்ளதாக

நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இப்பொழுது அயலான் மற்றும் டாக்டர் உள்ளிட்ட திரை படங்கள் கைவசம் வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் தனது அடுத்த திரைப்படத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனர் தேசிங் பெரியசாமியுடன் இணைய உள்ளதாக சில செய்திகள் கசிந்துள்ளது.

வேஷ்டி சட்டையில்

வேஷ்டி சட்டையில்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை வெகுசிறப்பாக உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சிவகார்த்திகேயன் வீட்டில் கையில் கரும்புடன் சர்க்கரைப்பொங்கலைக் கிண்டியவாறு கோலாகலமாக பொங்கல் கொண்டாடி வேஷ்டி சட்டையில் எடுத்துக்கொண்ட ஹேண்ட்சமான புகைப்படங்களையும் பதிவிட்டு வைரலாகி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X