வரவு, செலவு எல்லாத்தையும் ஆர்த்தி தான் பார்க்குறா.. மனைவியை மேடையில் புகழ்ந்த சிவகார்த்திகேயன்!

சென்னை: என்னோட பவுனுத்தாயே என் மனைவி ஆர்த்தி தான் என சிவகார்த்திகேயன் இன்று நடைபெற்ற தாய் கிழவி படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் மனைவியை புகழ்ந்து தள்ளிவிட்டார். மனைவியை வொர்த் இல்லைன்னு விஜய் எப்படி சொல்லலாம் என பலரும் விளாசி வரும் நிலையில், மனைவி ஆர்த்தியை சிவகார்த்திகேயன் மேடையில் புகழ்ந்ததை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, அருள் தாஸ், இளவரசு, ரேச்சல் ரெபேக்கா உள்ளிட்ட பலர் நடித்த தாய் கிழவி திரைப்படம் கடந்த பிப்ரவரி 27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Sivakarthikeyan praised his wife Aarthi at Thaai Kizhavi Success Meet
Photo Credit:

சுமார் 10 நாட்களில் 50 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாறியுள்ளது. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நடிகைகளின் உமன் சென்ட்ரிக் படங்கள் சொதப்பி வரும் நிலையில், ராதிகா சரத்குமாரை வைத்து தாய் கிழவி படத்தைக் கொடுத்து வசூல் வேட்டை நடத்தியுள்ளார் சிவகார்த்திகேயன்.

அக்கவுண்ட்ல எவ்ளோ இருக்குன்னே தெரியாது: "தாய் கிழவி படத்தில் வரும் பவுனுத்தாயி போலத்தான் என் மனைவியும் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய நாளில் இருந்தே என்னோட வரவு, செலவு கணக்கு எல்லாத்தையும் ஆர்த்தி தான் பார்த்துக்குறாங்க. எனக்கு என் அக்கவுண்ட்ல எவ்ளோ இருக்குன்னு கூட தெரியாது. இப்போ கூட எங்கேயாவது வெளியூர் போக டிக்கெட் போடணும்னா கூச்சப்படாம என் மனைவி ஆர்த்திக்கிட்ட கேட்டு காசு வாங்கிட்டு போவேன்" என நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியை தாய் கிழவி படத்தின் வெற்றி விழாவில் புகழ்ந்து பேசிய காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

தயாரிப்பு நிறுவனத்தையே பார்த்துக்குறாங்க: வீட்டின் வரவு, செலவு கணக்கை தாண்டி தயாரிப்பு நிறுவனத்தின் வரவு, செலவுகளையும் ஆர்த்தியே பார்த்துக் கொள்கிறார் என்றும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். அவங்க இல்லைன்னா தயாரிப்பு நிறுவனத்தை எல்லாம் என்னால நடத்தியிருக்கவே முடியாது என்றும் மேடையில் மனைவியை கொண்டாடி விட்டார்.

மனைவியை மதிக்கணும்: எந்தவொரு ஆணுடைய வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என சொல்வார்கள். எந்தவொரு நிலையிலும், எவ்வளவு உச்சத்துக்கு சென்றாலும் மனைவியை மதிக்கவில்லை என்றால் அந்த ஆணுக்கான மரியாதை நம்முடைய சமூதாயத்தில் கொஞ்சம் கூட கிடைக்காது என்றும் சிவகார்த்திகேயனை அந்த வகையில் பாராட்ட வேண்டும் என ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X