ரொம்ப பெருமையா இருக்கு.. ஈகோ இல்லாத சிவகார்த்திகேயன்.. ரசிகர்கள் பாராட்டு

சென்னை: சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அடுத்ததாக அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். மேலும் வெங்கட் பிரபு, சுதா கொஞ்கரா, சிபி சக்கரவர்த்தி ஆகியோரின் இயக்கத்திலும், ஒவ்வொரு படத்திலும் நடிக்கிறார். இதனால் அவர் படுபிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் சிவகார்த்திகேயனின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவான படம் அமரன். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருந்தது. இதில் சிவாவுடன் சாய் பல்லவியும் நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு அந்தப் படம் கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியானது. மேலும் எஸ்கேவுக்கு இதற்கு முன்னர் வந்த அயலான், மாவீரன் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்தன.

sivakarthikeyan amaran

அமரன் சக்சஸ்: அதேபோல் இந்தப் படமும் ஹிட்டாக வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் ஆசை. அவர்களின் ஆசையை நிறைவேற்றும்படியாகத்தான் படத்தின் ரிசல்ட் அமைந்தது. படத்தின் மேக்கிங், இசை, நடிகர்களின் நடிப்பு என அனைத்து ஏரியாவிலும் படம் பக்காவாக இருந்ததால் அமரன் படத்தை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள் ரசிகர்கள். அதிலும் சிவா மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு, அவர்களுக்குள் இருந்த கெமிஸ்ட்ரி என அதனையும் கொண்டாடினார்கள்.

வசூல் வேட்டை: விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் ப்ளாக்பஸ்டர்தான். படம் வெளியாகி ஒரு வாரத்திலேயே கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவிட்டது. மேலும் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படமோ படுதோல்வியை சந்தித்துவிட்டது. இதன் காரணமாக அமரன் படத்துக்கு மேலும் கூட்டம் கூடியது. எனவே இதுவரை தியேட்டரில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி ஓடிடி ரிலீஸை தள்ளிவைக்கும்படியும் கோரிக்கை எழுந்திருக்கிறது. அதுமட்டுமின்றி மொத்தம் 350 கோடி ரூபாய் வசூலையும் படம் தாண்டிவிட்டது.

அடுத்த படம்: இதன் காரணமாக எஸ்கேவின் கிராஃப் உச்சத்துக்கு சென்றிருக்கிறது. இந்தப் படத்தை முடித்திருக்கும் அவர் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார்.மேலும் வெங்கட் பிரபு, சுதா கொங்கரா, சிபி சக்கரவர்த்தி ஆகியோரின் படங்களிலும் நடிக்கிறார். இதற்கிடையே திரைத்துறையில் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக பார்க்கப்படுபவர் விஜய் சேதுபதி. அவரும் தனக்கான மார்க்கெட்டை தக்க வைத்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான மகாராஜா திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.

பாராட்டிய சிவகார்த்திகேயன்: அதுமட்டுமின்றி சீனாவிலும் அந்தப் படம் வெளியாகி அப்ளாஸை அள்ளியது. இந்நிலையில் இதுகுறித்து சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சீனாவில் மகாராஜா மிகப்பெரிய அளவில் ரிலீஸாகியிருக்கிறது. மிகவும் பெருமையாக இருக்கிறது. மேலும் அந்தப் படம் அங்கும் நல்ல ஹிட்டாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. விஜய் சேதுபதி, நித்திலன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அட போட்டி நடிகரின் படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவிக்கிறாரே என எஸ்கேவை பாராட்டிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X