Sivakarthikeyan - அந்த கேள்வி மட்டும் கேட்டுடாதீங்க.. சிவகார்த்திகேயன் பேட்டி கொடுக்க போடும் கண்டிஷன் இதுவா?
சென்னை: சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தோன்றி பிறகு நடிகராக அறிமுகமானார். அவரது நடிப்பில் அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸாகிறது. அன்றைய தினம் தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படமும் வெளியாகிறது. தனுஷால்தான் சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். எனவே இந்த ரேஸில் யார் வெல்வார் என்ற கேள்வி பலரிடமும் எழுந்திருக்கிறது.
சின்னத்திரையில் தோன்றி தற்போது கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்து அதில் சென்றுகொண்டிருக்கும் அவருக்கு சிறுவர்கள்,சிறுமிகள் ரசிகர் ரசிகைகளாக இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அவர் நடித்த டாக்டர், டான் ஆகிய படங்கள் தொடர்ச்சியாக நூறு கோடி ரூபாயை வசூலித்தது. இதன் காரணமாக சிவகார்த்திகேயனுக்கான வியாபாரம் பெருகியது.

அடிவாங்கிய பிரின்ஸ்: வரிசையாக இரண்டு படங்கள் 100 கோடி வசூலில் இணைந்ததால் அனூதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்தது. மேலும் அப்படம் பைலிங்குவலாக உருவானதால் தெலுங்கிலும் ஒரு ரவுண்ட் வரலாம் என கணக்கு போட்டிருந்தார் சிவா. ஆனால் அவரது கணக்கை தவிடுபொடியாக்கியது பிரின்ஸ் ரிசல்ட். படத்தை ஒரு வாரத்திலேயே தியேட்டர்களில் இருந்து தூக்கிவிட்டார்கள்.
மாவீரன் சிவகார்த்திகேயன்: பிரின்ஸ் கொடுத்த அடிக்கு மருந்தாக மாவீரன் இருக்கும் என நம்பியிருந்தார் சிவகார்த்திகேயன். அதற்கேற்றபடி மாவீரன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதிலும் சிவகார்த்திகேயனின் நடிப்பு அவரது ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக மாவீரன் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டில் பேசிய அவர், இந்த முறை மிஸ் ஆகாது என்று பேசியிருந்தார். அதேபோல் படமும் ஹிட்டானது.
அயலான்: மாவீரன் வெற்றிக்கு பிறகு அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இன்று நேற்று நாளை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ரவிக்குமாரின் இயக்கம் என்பதாலும்; ஏலியனை மையப்படுத்தி படம் உருவாகியிருப்பதாலும் அயலான் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.மாவீரன் கொடுத்த வெற்றியை அயலான் படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் தக்க வைத்துக்கொள்வார் என்றும் அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். படத்தின் ட்ரெய்லர் இன்று இரவும் 8.07 மணிக்கு வெளியாகவுள்ளது.
மிஸ்டர் க்ளீன்: இதற்கிடையே சிவகார்த்திகேயனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்று சொல்வது உண்டு. அதனாலேயே கோலிவுட்டில் மிஸ்டர் க்ளீன் என்று பெயர் எடுத்திருப்பவர். இருந்தாலும் இசையமைப்பாளர் இமான் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் க்ளீன் இமேஜை கொஞ்சம் அசைத்து பார்த்தது. ஆனால் சிவாவின் ரசிகர்களோ, இதெல்லாம் திட்டமிட்டு அவதூறு பரப்புவது என்றனர்.
கண்டிஷன் போடும் சிவகார்த்திகேயன்: சூழல் இப்படி இருக்க அயலான் ரிலீஸுக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. எனவே படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக சிவகார்த்திகேயன் தொடர்ந்து பேட்டிகளை கொடுத்துவருகிறார். இந்நிலையில் தற்போது அவர் கொடுத்து வரும் பேட்டிகளுக்கு முன்னர் கறாரான கண்டிஷன் ஒன்றை போடுகிறாராம். அதாவது பேட்டி கொடுக்க தயார். ஆனால் இமான் விவகாரம் குறித்து எந்த கேள்வியையும் கேட்கக்கூடாது என்று சொல்லிவிடுகிறாராம். அதேபோல் சின்ன சின்ன யூட்யூப் சேனல்களுக்கும் பேட்டி கொடுப்பதை தவிர்த்துவிடுகிறாராம் சிவகார்த்திகேயன். இதனை கேள்விப்பட்ட திரைத்துறையினர் சின்னத்திரையிலிருந்து வந்த சிவகார்த்திகேயன் இப்போது சின்ன சின்ன யூட்யூப் சேனல்களை கண்டுகொள்ள மறுக்கிறாரே என தெரிவித்துவருகின்றனர்.
கமல், சிவகார்த்திகேயன்: சிவகார்த்திகேயன் தற்போது கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் தற்போது மும்முரமாக நடந்துவருகிறது. அடுத்ததாக அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











