சிவகார்த்திகேயனுடன் நடனமாடிய ராம்சரண்.. கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது !
சென்னை : ராம் சரணுடன் சிவகார்த்திகேயன் "ஏன்டி இங்க" என்ற பாடலுக்கு மேடையில் இணைந்து நடனமாடினார். இவர்கள் இருவரும் நடனமாடுவதை பார்த்து அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது.
ராம் சரண் தெலுங்கு சினிமாவின் மிக முக்கியமான நடிகர். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்து தற்போது தெலுங்கு சினிமாவில் மிக பெரிய நாயகனாக உயர்ந்துள்ளார். அவருக்கு சமீபத்தில் மக்களின் சிறந்த எண்டர்டெயினர் என்று விருது வழங்கப்பட்டது.

இந்த விருது வழங்கும் விழாவை ஒரு தனியார் நிறுவனம் நடத்தி இருந்தது . இதற்கு பல நட்சத்திரங்கள் சிறப்பு விருந்தினராக பலர் வந்து இருந்தனர். இந்த விழாவில் நடிகர் ராம்சரணுக்கு இயக்குனர் ஷங்கர் விருது வழங்கி கௌரவித்தார்.
அப்போது விழாவில் பேசிய ராம்சரண் முதலில் அனைவருக்கும் நன்றி, நான் சென்னை வரவேண்டும் என்று எப்போதும் நினைப்பதுண்டு ஆனால் அதற்கான சரியான நேரம் அமையவில்லை தற்போது இப்படி ஒரு விருது வழங்கும் விழா அமைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி என்றார்.
நான் சென்னையில் தான் பிறந்தேன், சென்னையில் தான் தனது ஆரம்ப கல்வியை பயின்றதாகவும் ராம்சரண் கூறினார். மேலும், விருது வழங்கும் விழாவிற்கு போக பிடிக்காது பல மணி நேரம் விழாவை உட்கார்ந்து பார்க்க வேண்டும், ஒரே இடத்தில் உங்கார என்னால முடியாது என்றார். ஆனால், இந்த விழா சென்னையில் நடப்பதால் ஆர்வமுடன் பங்கு கொள்ள வந்து இருக்கின்றேன் என்றார் .

அப்போது மேடையில் தொகுப்பாளர் ராம்சரணை ஆடும் படி கேட்டு கொண்டார் அதற்கு ராம் சரண், சிவகார்த்திகேயன் வந்தால் தான் ஆடுவேன் என்றும் கூறினார். தனது தங்கை சிவகார்த்திகேயனின் பெரிய ரசிகை வீட்டில் அனைவரும் சிவகார்த்திகேயன் படம் என்றால் விரும்பி பார்போம் என்றும் கூறினார்.
ராம்சரணின் வேண்டுகொள்ளுக்கு இணங்க மேடை ஏறி வந்த சிவகார்த்திகேயன் ராம் சரணுடன் "ஏன்டி இங்க" என்ற பாடலுக்கு இருவரும் நடனமாடினர். இவர்கள் இருவரும் நடனமாடுவதை பார்த்து அரங்கமே கைதட்டில் நிரம்பி வழிந்தது.


Click it and Unblock the Notifications











