அடுத்தடுத்து தோல்விப் படங்கள்... வேறு வழியே இல்லாமல் சம்பளத்தை குறைத்த SK.. அதுவும் இத்தனை கோடியா?
சென்னை: சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.
மடோன் அஸ்வின் இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் சிவகார்த்திகேயேன் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.
எஸ்கே - ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய பட அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிவகார்த்திகேயனின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மாவீரன் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்தாண்டு மாவீரன், அயலான் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் மாவீரன் ஷூட்டிங் விரைவில் முடிவுக்கு வருவதாக சொல்லப்படுகிறது. அதனையடுத்து ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், ரவிக்குமார் இயக்கியுள்ள அயலான் திரைப்படமும் இந்தாண்டு கண்டிப்பாக ரிலீஸாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பளத்தை குறைத்த எஸ்கே
மாவீரன் ஷூட்டிங் முடிந்ததும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பே சிவாவின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்ற அறிவிப்பும் வெளியாகிறதாம். அதன்படி, SK 25 படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்தப் படத்துக்காக சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை குறைக்கவுள்ளாராம்.

அடுத்தடுத்து தோல்வி படங்கள்
2021ல் வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. ஆனால், அதனைத் தொடர்ந்து கடந்தாண்டு ரிலீஸான டான், பிரின்ஸ் இரண்டு படங்களும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதனால், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்திற்காக தனது சம்பளத்தை குறைத்துள்ளாராம் சிவகார்த்திகேயன். இதுவரை 35 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், SK 25 படத்திற்கு 5 கோடி வரை சம்பளத்தை குறைத்துள்ளாராம். திடீரென சிவகார்த்திகேயன் சம்பளத்தை குறைத்துள்ளதாக வெளியான செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதிர்ச்சியில் கோலிவுட்
குறுகிய காலத்தில் டாப் ஹீரோக்களின் பட்டியலில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். இதனால் சிவகார்த்திகேயன் கால்ஷீட்டுக்காக முன்னணி இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் வரை காத்திருக்கின்றனர். டாக்டர் படம் மூலம் மார்க்கெட்டில் உச்சம் தொட்ட சிவகார்த்திகேயன், இரண்டு படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்ததால் சம்பளத்தை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டார். இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவீரன் ரிலீஸ் அப்டேட்
ராஜ்குமார் பெரியசாமி, ஏஆர் முருகதாஸ் படங்களைத் தொடர்ந்து வெங்கட்பிரபுவுடனும் சிவகார்த்திகேயன் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்தின் பட்ஜெட் மட்டும் 100 கோடி இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது. மேலும் பிரம்மாண்டமான மேக்கிங்கில் இந்தப் படத்தை இயக்க ஏஆர் முருகதாஸ் திட்டமிட்டுள்ளாராம். இன்னொரு பக்கம் மாவீரன் திரைப்படம் பக்ரீத் ஸ்பெஷலாக வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து மாவீரன் படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











