விஜய்க்கு மட்டுமல்ல.. விஜய் மகனுக்கும் போட்டியாக மாறிய சிவகார்த்திகேயன்.. இதை பாருங்க முதல்ல!

சென்னை: நடிகர் விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ள ஜன நாயகன் படத்துக்கு பிரபாஸின் தி ராஜா சாப் படம் மட்டுமே போட்டியாக இருக்கும் என்றும் தமிழ் சினிமாவில் எந்தவொரு நடிகரும் விஜய்யுடன் நேரடியாக அவரது கடைசி படத்தின் போது மோதமாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜனவரி 14 ரிலீஸ் தேதியை அறிவித்த சிவகார்த்திகேயன், நான் வரேன் போட்டிக்கு என ஜனவரி 10ம் தேதி பராசக்தி படத்தை ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளார்.

இந்த கதையை சோஷியல் மீடியா முதல் திரையுலகம் வரை பல இடங்களிலும் விவாதித்து வருகின்றனர். இந்நிலையில், இதற்கு இடையே தற்போது விஜய்க்கு மட்டுமல்ல, விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் போதும் அவருக்கு போட்டியாக சிவகார்த்திகேயன் மாறியுள்ளார் என்கின்றனர்.

Sivakarthikeyan release his next movie update and clash with Jason Sanjay s Sigma
Photo Credit:

என்னப்பா சொல்றீங்க என வியக்கும் ரசிகர்களுக்கு சற்று முன் வெளியான இரு அப்டேட்கள் தான் பதிலாக மாறி நிற்கிறது.

ஜேசன் சஞ்சயின் 'சிக்மா டீசர்': விஜய் மகன் என்கிற எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல், ஆரமத்தில் இருந்தே லைகா தயாரிப்பில் அப்பா பெயரை பயன்படுத்தாமல் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகி வரும் சிக்மா படத்தின் டீசர் தற்போது வெளியானது. சந்தீப் கிஷனை வைத்து படம் இயக்கி இயக்குநராக அறிமுகமாகி விட்டார் ஜேசன் சஞ்சய். நீர், நிலம், காற்று உள்ளிட்டவற்றின் மதிப்பு கூடுவதை போல பணத்தின் மதிப்பும் அதிகரிக்கிறது என ஆரம்பமே அசத்தலான வசனத்தை வைத்து படம் பணத்தை பற்றியது தான் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார்.

சிவகார்த்திகேயன் பட அறிவிப்பு: இன்று மாலை 5 மணிக்கு விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் 'சிக்மா' படத்தின் டீசர் வெளியான நிலையில், அதே 5 மணிக்கு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் அறிமுக க்ளிம்ப்ஸ் வீடியோவும் ஷார்ப்பாக வெளியாகி இருக்கிறது. நாளை அந்த படத்தின் டீசர் வெளியாகிறது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு தாய் கிழவி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ராதிகா சரத்குமார் லீடு ரோலில் நடித்துள்ளார் என்கின்றனர். நாளை மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வ டைட்டில் டீசர் வெளியாகும்.

விஜய் மகனுடன் மோதல்? ஒரு பக்கம் அப்பா விஜய்யுடன் பொங்கல் போட்டியில் களமிறங்கியுள்ள சிவகார்த்திகேயன், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயின் முதல் பட அறிவிப்பு வெளியாகும் அதே நேரத்தில் தனது பட அறிவிப்பையும் வெளியிட்டுள்ள நிலையில், மகனுடன் மோதுகிறார் என விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X