சிவகார்த்திகேயன் தாடி, மீசையுடன் சுற்றியதற்கு காரணம் என்ன தெரியுமா?

By Siva

சென்னை: சிவகார்த்திகேயன் தாடி, மீசையுடன் சுற்றியதற்கான காரணம் தெரிந்து விட்டது.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ள சீமராஜா வரும் 13ம் தேதி ரிலீஸாக உள்ளது. ரிலீஸுக்கு 10 நாட்கள் இருக்கும் நிலையில் தற்போதே கொண்டாட்டத்தை துவங்கிவிட்டனர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.

சீமராஜா ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. ட்ரெய்லரில் சிவா கெத்தாக இருக்கிறார்.

கவலையா?

கவலையா?

பொன்ராம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட பிறகு சிவகார்த்திகேயன் தாடி, மீசையுடன் வலம் வந்தார். தலைமுடியையும் வெட்டாமல் இருந்தார். சிவாவுக்கு என்னாச்சு, ஏன் இப்படி இருக்கிறார், ஏதாவது கவலையா? என்று பலரும் கேட்டனர். அவருக்கு என்னப்பா ராசா மாதிரி இருக்கிறார். ஆனால் அப்படி இருந்தும் ஏன் தாடி வளர்க்கிறார் என்று பேசப்பட்டது. இந்நிலையில் அந்த தாடி, நீள தலைமுடிக்கு பின்னால் இருக்கும் காரணம் தெரிய வந்துள்ளது.

சீமராஜா

சீமராஜா

சீமராஜா ட்ரெய்லரின் இறுதியில் சிவகார்த்திகேயன் போர் வீரன் கெட்டப்பில் வந்திருந்தார். அந்த கெட்டப்புக்காகத் தான் தாடி வளர்த்தாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அந்த போர் வீரன் காட்சியை கஷ்டப்பட்டு படமாக்கியுள்ளோம். ட்ரெய்லரில் வந்த அந்த காட்சியை பிரிண்ட் ஸ்கிரீன் எடுத்து பாகுபலி என்று சிலர் போட்டிருக்கிறார்கள். இதை விட பெரிய கவுரவம் கிடைக்காது என்று நினைக்கிறேன் என்கிறார் சிவகார்த்திகேயன்.

பெருமை

பெருமை

ஒட்டு மொத்த உலகையே உலுக்கிய, திரும்பிப் பார்க்க வைத்த படம் பாகுபலி. அது போன்ற ஒரு ஷாட்டை நாங்கள் எடுத்துவிட்டோம் என்பதே எங்களுக்கு பெரிய பெருமை. அந்த போர்ஷனை தான் ரொம்ப மெனக்கெட்டு எடுத்தோம். இடையே சினிமா ஸ்டிரைக் நடந்ததால் ஒரு மாதம் ஷூட்டிங் நடக்கவில்லை. அந்த ஒரு மாத வேலையை நாங்கள் சரிகட்டியுள்ளோம். இதற்காக கடினமாக உழைத்த அனைவருக்கும் ஹாட்ஸ் ஆஃப் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

நான் ஒரு தமிழ் மன்னனாக நடித்துள்ளேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் மன்னர்களை பற்றி பாடத்தில் படித்துள்ளேன். என்னை ஒரு மன்னராக கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அதற்காக மாற வேண்டி இருந்தது. நான் நிறைய முடி, தாடி வைத்தது அந்த கெட்டப்புக்காக தான். இது குறித்து முன்பே யாரிடமும் கூற முடியாத நிலையில் இருந்தேன் என்று சிவா கூறினார்.

கெட்டப்

கெட்டப்

நான் தாடி வளர்த்ததை பார்த்து நிறைய பேர் ஏன்பா இப்படி இருக்க, உடம்பு சரியில்லையா என்று கேட்டார்கள். என்னால் அப்பொழுது எதுவும் கூற முடியவில்லை. அதனால் சும்மா தான் சும்மா தான் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். 20 நாட்களில் வெயிட் ஏற்றி அந்த லுக்கை கொண்டு வந்தோம். முதலில் சூரி மாதிரி உடம்பை குறைத்து விடலாமா என்று கூட யோசித்தோம். அந்த கதாபாத்திரத்திற்கு லுக் ரொம்ப முக்கியம் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X