நான் விபத்தில் எல்லாம் சிக்கவில்லை, நல்லா தான் இருக்கேன்: சிவகார்த்திகேயன்
சென்னை: தான் விபத்தில் சிக்கி படுகாயம் அடையவில்லை என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் நிலைமை மோசமாக உள்ளதாகவும் வதந்தி பரவியது. இதையடுத்து அவரது ரசிகர்கள் பத்திரிக்கை அலுவலகங்களுக்கும், சிவகார்த்திகேயனின் அலுவலகத்திற்கும் போன் செய்து விசாரித்தனர்.

இந்நிலையில் இது குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில்,
நான் எந்த விபத்திலும் சிக்கி காயம் அடையவில்லை. பலர் எனக்கு போன் செய்து விபத்தாமே என்று கேட்டனர். அதனால் என் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டேன். இந்த வதந்தி எப்படி எங்கிருந்து கிளம்பியது என்றே தெரியவில்லை. டாணா படத்தில் வரும் பாடல் காட்சி ஒன்றில் பிசியாக உள்ளேன் என்றார்.
தனுஷ் தயாரிக்கும் டாணா தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











