'கனா'வுக்காக அப்பாவுடன் சேர்ந்து பாட்டு பாடிய சிவகார்த்திகேயன் மகள் #Kanaa
Recommended Video

சென்னை: சிவகார்த்திகேயனின் செல்ல மகள் தனது தந்தை தயாரிக்கும் படம் மூலம் பாடகியாகியுள்ளார்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகர் என்று படிப்படியாக முன்னேறிக் கொண்டே இருக்கிறார்.

தனது நண்பனான பாடகரும், பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜா இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள கனா படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருவது அனைவரும் அறிந்ததே.
பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தனது செல்ல மகள் ஆராதனாவுடன் சேர்ந்து ஒரு பாடலை பாடியுள்ளார்.
கனா படத்தின் பாடல்கள் நாளை வெளியிடப்படுகிறது. சிவகார்த்திகேயன், ஆராதனா சேர்ந்து பாடிய பாடலை கேட்க அவரின் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
கனா இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர்கள் அனிருத், இமான், இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். பாடல்களை கிரிக்கெட் வீராங்கனை ஸமிரிதி மந்தனா வெளியிடுகிறார்.


Click it and Unblock the Notifications











