அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் மாஸ்டர் வசூலை அடித்து நொறுக்கிய சிவகார்த்திகேயனின் டாக்டர்!
சென்னை: அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் மாஸ்டர் படத்தின் வசூலை முறியடித்துள்ளது சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம்.
Recommended Video
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'டாக்டர்'.
இந்தப் படம் கடந்த 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் ரிலீஸ் ஆகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிவகார்த்திகேயனின் பெஸ்ட் படம்
இந்தப் படத்தில் வினய், பிரியங்கா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உடல் உறுப்பு கடத்தலை டார்க் காமெடி படமாக கொடுத்துள்ளார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். இந்தப் படம் சிவகார்த்திகேயன் நடிப்பை ரசிகர்கள் பெஸ்ட் என கொண்டாடி வருகின்றனர்.

வசூலை குவிக்கும் டாக்டர்
இந்தப் படம் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அதன்படி டாக்டர் படம் முதல் மூன்று நாட்களில் 25 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து முதல் வாரத்தில் மட்டும் டாக்டர் திரைப்படம் தமிழகத்தில் 50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவிலும் வசூல் வேட்டை
தமிழகம் மட்டுமின்றி அமெரிக்காவிலும் டாக்டர் படம் வசூலி பட்டையை கிளப்பி சாதனை படைத்து வருகிறது. அதன்படி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் 440ஆயிரம் டாலர்களை குவித்துள்ளது.

மாஸ்டர் சாதனை முறியடிப்பு
இதன் மூலம் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் 439 ஆயிரம் டாலர்களை வசூலித்த விஜய்யின் மாஸ்டர் படத்தின் சாதனையை இந்தப் படம் முறியடித்துள்ளது. மாஸ்டர் படம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆனது. கொரோனா கட்டுப்பாடுகளால் குறைந்தளவிலான திரையரங்குகளில் மாஸ்டர் படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

வசூலை குவித்த தமிழ் படம்
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் சாதனையை முறியடித்துள்ளதன் மூலம் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை குவித்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையை டாக்டர் படம் படைத்துள்ளது. அடுத்ததாக தீபாவளிக்கு ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகவுள்ளதால் டாக்டர் படத்தின் சாதனையை அண்ணாத்த படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











