‘டாக்டர்‘ வெற்றிக் கொண்டாட்டம்... கேக் வெட்டி படக்குழுவினர் மகிழ்ச்சி !

சென்னை : சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் வெற்றியடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.

இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன்,வினய், யோகிபாபு, தீபா, விஜே அர்ச்சனா, அர்ச்சனாவின் மகள் சாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் அக்டோபர் 9ந் தேதி தேதி திரையரங்கில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்று வசூலை வாரிக்குவித்து வருகிறது.

டாக்டர்

டாக்டர்

நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தில், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி, அடுத்தடுத்து தமிழ் திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்றி வரும் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்.

முக்கிய நடிகர்கள்

முக்கிய நடிகர்கள்

இதில், யோகிபாபு, வினய், பிக்பாஸ் அர்ச்சனா, அவருடைய மகள் சரா, தீபா, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷனும் தயாரித்துள்ளது.

Recommended Video

Doctor Audience Opinion | BMW carல் கெத்தாக வந்து இறங்கிய Sivakarthikeyan
நகைச்சுவை படம்

நகைச்சுவை படம்

டாக்டர் திரைப்படம் 9ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பாராட்டை வெற்றது. டாக்டராக நடித்துள்ள சிவகார்த்திகேயனுக்கும் பிரியங்காவிற்கும் இடையே திருமணம் நடைபெற இருந்த போது, சிவகார்த்திகேயனின் நடவடிக்கை பிடிக்காமல் திருமணத்தை நிறுத்தி விடுகிறார் பிரியங்கா. இந்த நேரத்தில் சிவகார்த்திகேயனின் அண்ணன் மகள் கடத்தப்படுகிறாள் அவளை எப்படி மீட்கிறார் என்பதே படத்தின் கதை.

பாராட்டு

பாராட்டு

படம் முழுக்க காமெடிக் காட்சிகள் நிறைந்து அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து வசூலையும் வாரிக்குவித்தது. கொரோனா ஊரடங்குக்கு பிறகு அதிகமான மக்களை திரையரங்குக்கு இந்த திரைப்படம் வரவைத்தது என்று இப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கேக் வெட்டி கொண்டாட்டம்

கேக் வெட்டி கொண்டாட்டம்

இந்த நிலையில், டாக்டர் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இதில், சிவகார்த்திகேயன், இயக்குநர் நெல்சன் திலீப்குமார், நடிகர் கவின், ரெடின் கிங்ஸ்லி, வினய் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 'டாக்டர் ப்ளாக்பஸ்டர்' என்று எழுதப்பட்ட கேக்கை படக்குழுவினர் ஒன்றிணைந்து உற்சாகமுடன் வெட்டினர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X