நா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்

By Siva

Recommended Video

நா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்- வீடியோ

சென்னை: நயன்தாரா படத்திற்கு கிடைத்த சம்பளத்தை நா. முத்துக்குமாரின் குடும்பத்தாருக்கு கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையில் இருந்து வந்து அசுர வளர்ச்சி அடைந்துள்ளவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வருபவர்கள் சிவகார்த்திகேயன் போன்று ஆக வேண்டும் என்று அவரை ரோல் மாடலாக பார்க்கிறார்கள்.

Sivakarthikeyans kind gesture

தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் என்று புதுப்புது அவதாரம் எடுத்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்தில் வரும் கல்யாண வயசு பாடலை எழுதியவர் உங்கள் சிவகார்த்திகேயன்.

அந்த பாடல் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. யூடியூபில் 36 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்நிலையில் அந்த பாடலுக்காக சிவகார்த்திகேயனுக்கு ரூ. 2 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

அவரோ சம்பளத்தை வாங்காமல் அதை மறைந்த பாடல் ஆசிரியர் நா. முத்துக்குமாரின் குடும்பத்திற்கு கொடுக்குமாறு தயாரிப்பாளர்களிடம் கூறிவிட்டாராம்.

நா. முத்துக்குமாரை மிஸ் பண்ணுகிறோம், அவரின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று திரையுலகை சேர்ந்த பலரும் தெரிவித்தனர். ஆனால் அவர் குடும்பத்திற்கு பண உதவி செய்துள்ள சிவகார்த்திகேயனின் நல்ல மனதை பலரும் பாராட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X